Published : 27 Aug 2025 07:05 AM
Last Updated : 27 Aug 2025 07:05 AM

கருத்தடை, தடுப்பூசி, காப்பகம் மூலம் தெரு நாய்களை பாதுகாப்போம்: பொதுமக்களுக்கு பிரேமலதா அழைப்பு

சென்னை: தேமுதிக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாய்​கள் மனிதர்​களுக்கு உண்மை​யான தோழர்​களாக​வும், குடும்ப உறுப்​பினர்​களாக​வும் வீட்​டின் பாது​காவலர்​களாக​வும் விளங்​கு​கின்​றன. இந்து மரபில், பைர​வர் வடிவ​மாக வழிபடப்​படும் நாய்​கள், விசு​வாசத்​தை​யும், நன்​றியை​யும் வெளிப்​படுத்​துகின்​றன.

இந்​தி​யா​வில், நகர்ப்​புறமோ, கிராமப்​புறமோ, நாய்​கள் மனிதர்​களு​டன் நெருங்​கிய பிணைப்​பைக் கொண்​டுள்​ளன. தெரு நாய்களின் எண்​ணிக்கை அதி​கரிப்​பு, நாய்க்​கடி மற்​றும் பொது​மக்​களின் பாது​காப்பு குறித்து தற்​போது கவலைகள் எழுந்​துள்ள நிலை​யில், நாய்க்​கடி ஏற்​பட்​டால் உடனடி மருத்​துவ சிகிச்சை பெறு​வது குறித்து பொது​மக்​களுக்கு விழிப்​புணர்வு தேவை. மத்​திய, மாநில அரசுகள் தெருநாய்​களுக்கு கருத்​தடை, தடுப்​பூசி திட்​டங்​களை தீவிரப்​படுத்த வேண்​டும்.

மேலும் கூடு​தல் காப்​பகங்​கள் அமைத்​து, பொது​மக்​கள் பாது​காப்​பை​யும், விலங்கு நலனை​யும் உறுதி செய்ய வேண்​டும். நாய்​கள் நமது உயி​ரினக் குடும்​பத்​தின் ஒரு பகு​தி. தெரு நாய்​களை அழிக்​காமல், கருத்​தடை, தடுப்​பூசி, காப்​பகங்​கள் மூலம் பாது​காப்​போம். மனிதநே​யத்​துடன் இந்த உயி​ரினத்​தைக் காப்​போம் என்று​ கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x