Published : 27 Aug 2025 06:34 AM
Last Updated : 27 Aug 2025 06:34 AM

பூந்தமல்லி பைபாஸ் - போரூர் மெட்ரோ ரயில் தடத்தில் பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை வெற்றி

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் 4-வது வழித்​தடத்​தில் ஒரு பகு​தி​யான, பூந்​தமல்லி பைபாஸ் - போரூர் சந்திப்பு வரையி​லான வழித்​தடத்​தில் பாது​காப்பு சான்​றிதழ் பெறு​வதற்​கான சோதனை வெற்​றிகர​மாக நிறைவடைந்​து உள்​ளது.

சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் செயல்​படுத்​தப்​படும் 3 வழித்​தடங்​களில், கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரையி​லான வழித்​தடம் (26.1 கி.மீ.) ஒன்​றாகும். இத்​தடத்​தில் பூந்​தமல்லி - போரூர் சந்​திப்பு மெட்ரோ நிலை​யம் வரையி​லான (10 கி.மீ.) இரு​வழிப் பாதை​யில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்​டம் நடை​பெற்று வந்​தது. சிக்​னல், இழு​வைத் திறன் உட்பட பல்​வேறு தொழில்​நுட்ப சோதனை​கள் நடத்​தப்​பட்​டன.

இதற்​கிடை​யில், இத்​தடத்​தில் பாது​காப்​புச் சான்​றிதழ் பெறு​வதற்​கான சோதனை கடந்த 16-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வந்​தது. இச்​சோதனையை ரயில்வே அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் இந்​திய ரயில்வே ஆராய்ச்சி வடிவ​மைப்பு மற்​றும் தர நிர்ணய அமைப்பு மேற்​கொண்​டது. இந்த பாது​காப்பு சோதனை வெற்​றிகர​மாக நிறைவடைந்​துள்​ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: இச்​சோதனை​களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்​தில் மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​பட்​டு, பயணி​களின் பயண வசதி மதிப்​பீடு செய்​யப்​பட்​டது. அத்​துடன் வழித்​தடத்​தில் ரயில்​களின் இழுவை மற்​றும் பிரேக்​கிங் செயல்​திறன் சரி​பார்க்​கப்​பட்​டது. மெட்ரோ ரயில் பெட்​டிகள் மற்​றும் தண்​ட​வாளத்​தின் தரம் மதிப்​பீடு செய்​யப்​பட்​டது.

மின்​சா​ரம், காற்​றழுத்​தம் மற்​றும் அவசர காலங்​களில் பயன்​படுத்​தப்​படும் பிரேக் போன்ற பாது​காப்பு அம்​சங்​கள் மதிப்​பீடு செய்​யப்​பட்​டன. மெட்ரோ ரயில் பெட்​டிகளைத் தயாரிக்​கும்​போது, அதன் வடிவ​மைப்பு அம்​சங்​கள் பின்​பற்​றப்​பட்​டுள்ளன என்​பதை இந்த சோதனை​கள் நிரூபிக்​கின்​றன. மேலும் திட்​ட​மிடப்​பட்ட தேதிக்கு முன்​ன​தாகவே சோதனை​கள் நிறைவடைந்​துள்​ளன. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x