Published : 27 Aug 2025 06:15 AM
Last Updated : 27 Aug 2025 06:15 AM

தூய்மைப் பணியாளர்களை கைது செய்ததைக் கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சென்னை: ​போ​ராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​கள் நள்​ளிர​வில் கைது செய்​யப்​பட்​டதைக் கண்​டித்து மாநக​ராட்சி மன்ற கூட்​டத்​திலிருந்து இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி கவுன்​சிலர்​கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். சென்னை மாநக​ராட்சி மன்​றக்​கூட்​டம் மேயர் ஆர்​.பிரி​யா, தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

அப்​போது, ரிப்​பன் மாளிகை முன்​பு, 13 நாட்​களாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​களை வலுக்​கட்​டாய​மாக நள்ளிர​வில் கைது செய்​ததைக் கண்​டித்​து, திமுக கூட்​டணி கட்​சிகளான இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி கவுன்​சிலர்​கள் 4 பேர், ‘தூய்​மைப் பணி​யாளர்​களை பணி நிரந்​தரம் செய்’ என கோஷம் எழுப்​பிய​வாறு மாமன்ற கூட்​டத்​திலிருந்து வெளிநடப்பு செய்​தனர்.

சென்னை மாநகரில் தெரு நாய்​கள் தொல்லை அதி​கரித்​து​வரு​வ​தாக கவுன்​சிலர்​கள் புகார் தெரி​வித்த நிலை​யில், அதற்கு பதில் அளித்த மேயர் பிரி​யா, ‘‘சென்​னை​யில் தெரு நாய்​களுக்கு தினசரி கருத்​தடை செய்​யப்​பட்டு வரு​கிறது.

வளர்ப்பு நாய்​களை மாநகராட்​சி​யில் பதிவு செய்​ய​வும், தடுப்​பூசி போட​வும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. டிசம்​பர் மாதத்​துக்​குள் ஒரு மண்​டலத்​துக்கு ஒன்று வீதம் 15 இனக்​கட்​டுப்​பாடு மையங்​கள் செயல்​பாட்​டுக்கு வரும். அப்​போது கருத்​தடை செய்​யப்​படும் நாய்​களின் எண்ணிக்கை அதி​கரிக்​கும்” என்​றார்.

வால்​டாக்ஸ் சாலை​யில் உள்ள புதிய பல்​நோக்கு கட்​டிடத்​தில் 1,248 சதுரஅடி​யில், 2-வது தளத்​தில் ரூ.15,080 மாத வாடகை​யில், அன்னை தயாளு அம்​மாள் அறக்​கட்​டளை, வறுமைக்​கோட்​டுக்கு கீழ் வாழும் பொது​மக்​கள் மற்​றும் ஏழை, எளிய மாணவ, மாணவி​களுக்கு இலவச கணினி மற்​றும் தையல் பயிற்சி வகுப்பு நடத்த மாமன்ற கூட்​டத்​தில் அனு​மதி அளிக்​கப்​பட்​டது. டி.பி.சத்திரம் பகு​தி​யில் மாநக​ராட்சி கட்​டிடத்​தில் ‘அரண்’ என்ற திருநங்​கைகள் தங்​கும் இல்​லம் செயல்​பட​வும் அனு​மதி அளிக்கப்பட்​டது.

சென்னை மெரினா லூப் சாலை​யில் ரூ.1.56 கோடி​யில் குழந்​தைகள் விளை​யாட்டு பூங்கா அமைக்​க​வும், ஷெனாய் நகரில் உள்ள விளை​யாட்டு மைதானத்தை ரூ.5.30 கோடி​யில் மேம்​படுத்​த​வும், அம்​பத்​தூர் மண்​டலம் கள்​ளி​குப்​பம், அண்​ணாநகர் மண்​டலம் வில்​லி​வாக்​கம் ஆகிய பகு​தி​யில் உள்ள மாநக​ராட்சி இறைச்​சிக் கூடங்​களை ரூ.5.41 கோடி​யில் மேம்​படுத்​த​வும் கூட்​டத்​தில் அனுமதி அளிக்​கப்​பட்டது.

மெரினா கடற்​கரை, காம​ராஜர் சாலையை பாரம்​பரிய வழித்​தட​மாக மாற்ற சிஎம்​டிஏ திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி, மெரினா காமராஜர் சாலை​யில் 2.3 கி.மீ. நீளத்​துக்கு 4 மீட்​டர் அகலத்​தில் சைக்​கிள் பாதை உரு​வாக்​கப்பட உள்​ளது. காம​ராஜர் சாலை​யின் இரு​புற​மும் 9 பேருந்து நிறுத்​தங்​களும், 3 புறக்​காவல் நிலை​யங்​களும் அமைக்​கப்பட உள்​ளன. மேலும், 15 மாநக​ராட்சி பள்​ளி​களில் சுத்​தி​கரிக்​கப்​பட்ட தானி​யங்கி குடிநீர் மையங்​களை ரூ.1.75 கோடி​யில் அமைக்​க​வும், பள்ளி மாணவர்​கள் எண்​ணிக்​கைக்கு ஏற்ப 1,747 தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​களை பணி​யமர்த்​த​வும் அனு​மதி அளிக்​கப்​பட்​டது. மொத்​தம்​ 84 தீர்​மானங்​கள்​ நிறைவேற்றப்​பட்​டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x