Published : 27 Aug 2025 06:15 AM
Last Updated : 27 Aug 2025 06:15 AM

ஜெகதீப் தன்கர் விவகாரம்: ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படும் - செல்வப்பெருந்தகை தகவல்

விழுப்புரம்: விழுப்​புரம் மாவட்​டத்​தில் பொதுக் கணக்கு குழு மூலம் ஆய்வு பணி​யை மேற்​கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்​தகை விழுப்​புரம் வருகை புரிந்தார்.

முன்​ன​தாக சுற்​றுலா மாளி​கை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:முன்​னாள் குடியரசு துணைத் தலை​வர் ஜெகதீப் தன்​கர் பதவியை ராஜி​னாமா செய்த நாளில் இருந்​து, வெளியே வரவில்​லை. அவர் எங்கே இருக்​கிறார் என்று யாருக்​கும் தெரிய​வில்​லை. பாஜக தலை​வர்​கள் அவரை சிறைபிடித்து வைத்​துள்​ளார்​களா? ஜெகதீப் தன்​கர் மக்​களிடம் செல்​வதை பாஜக தடுக்க முயற்​சிக்​கிற​தா? அவரை வெளியே வரவி​டா​மல் தடுத்​துள்ள சக்தி யார்? அவரை மக்​களிடம் பாஜக தலை​வர்​கள் காண்​பிக்க வேண்​டும்.

இல்​லை​யெனில் நீதி​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு​தாக்​கல் செய்​யப்​படும். குடியரசு துணைத் தலை​வர் பதவியை ராஜி​னாமா செய்​வதற்கு நெருக்​கடி கொடுத்​தது யார்? சட்​டம் படித்து வழக்​கறிஞ​ராகப் பணி​யாற்​றியவர் ஜெகதீப் தன்கர். அவருக்கே பாதுகாப்பு இல்​லை. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இண்​டியா கூட்டணி 50 சதவீதத்​துக்​கும் கூடு​தலாக வாக்​கு​களைப் பெறும். இவ்​வாறு செல்​வப்​பெருந்​தகை கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x