Published : 27 Aug 2025 08:47 AM
Last Updated : 27 Aug 2025 08:47 AM

கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி: கோட​நாடு பங்​களாவை மாவட்ட நீதிபதி மற்​றும் எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் நேரில் ஆய்வு செய்ய வேண்​டும் என்று வலியுறுத்தி தாக்​கல் செய்​யப்​பட்ட மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அரு​கே​யுள்ள கோட​நாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு, பொருட்​கள் கொள்ளை அடிக்​கப்​பட்​டன.

இது தொடர்​பாக சயான், வாளை​யாறு மனோஜ், சந்​தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகு​மார், ஜித்​தின் ஜாய், ஜம்​சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

வழக்​கில் தொடர்​புடைய முக்​கிய குற்​றவாளி கனக​ராஜ் சாலை விபத்தில் உயி​ரிழந்​தார். இந்த வழக்கு விசா​ரணை நீல​கிரி மாவட்ட முதன்மை நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வரு​கிறது. திமுக ஆட்​சிக்கு வந்த பின்​னர் கோட​நாடு வழக்கு சிபிசிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது.

தடயங்கள் அழிப்பு: கொலை, கொள்ளை சம்​பவம் நடை​பெற்ற கோட​நாடு பங்​களா​வில் தடயங்​கள் அழிக்​கப்​பட்டு உள்​ள​தால், வழக்கை விசா​ரித்து வரும் மாவட்ட நீதிபதி மற்​றும் எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் கோட​நாடு பங்​களாவை ஆய்வு செய்ய அனு​மதிக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி, இந்த வழக்​கில் 10-வது குற்​ற​வாளி​யாக சேர்க்​கப்​பட்​டுள்ள ஜித்​தின் ஜாய் தரப்​பில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

ஏற்​கெனவே நிபுணர் குழு கோட​நாடு பங்​களாவை ஆய்வு செய்து அறிக்கை அளித்து விட்​ட​தா​லும், தற்​போது புலன் விசா​ரணை நடை​பெற்று வரு​வ​தா​லும், கோட​நாடு பங்​களாவை எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் ஆய்வு செய்ய அனு​ம​திக்க முடி​யாது என்​றும், தேவைப்​பட்​டால் மாவட்ட நீதிபதி மட்​டும் ஆய்வு செய்​ய​லாம் என்​றும் சிபிசிஐடி தரப்​பில் வலி​யுறுத்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், கோட​நாடு கொலை, கொள்ளை வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, ஜித்​தின் ஜாய் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை தள்​ளு​படி செய்​தும், வழக்கு விசா​ரணையை அடுத்த மாதம் 19-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தும் நீதிபதி முரளிதரன் உத்​தர​விட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x