Last Updated : 27 Aug, 2025 10:51 AM

 

Published : 27 Aug 2025 10:51 AM
Last Updated : 27 Aug 2025 10:51 AM

“பாமக அழிவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது!” - காடுவெட்டி குருவின் மகள் காட்டமான நேர்காணல்

விருதாம்பிகை மனோஜ்

பாமக-வையும் காடுவெட்டி குருவையும் பிரித்துப் பார்க்கமுடியாது. குரு மறைவுக்குப் பிறகு பாமக-வை விட்டு ஒதுக்கப்பட்ட அவரது குடும்பம் தனியாக செயல்பட்டு வருகிறது. இப்போது பாமகவே ரெண்டுபட்டுக் கிடக்கும் நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மனோஜ் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த மினி பேட்டி இது.

​பாமக-​வின் இன்​றைய நிலை குறித்​து..?

மிக​வும் வருத்​த​மாக இருக்​கிறது. எங்​கள் வெறுப்பு பாமக மீது இல்​லை. அன்​புமணி மீது​தான். எங்​கள் அப்பா அரும்​பாடு பட்டு வளர்த்த கட்சி அது. அவரை புறக்​கணித்​ததோடு, அவருடைய சாவுக்​கும் காரண​மாக இருந்​த​தால் கோபம் இருந்​தது. ஆனால் அதற்​காக, கட்சி அழி​வதை பார்த்​துக் கொண்டு சும்மா இருக்க முடி​யாது.

அப்​பா, மகன் மோதலை எப்​படி பார்க்​கிறீர்​கள்?

இது ஒரு நாடகம் தான். தொடர்ந்து தோல்வி முகத்தை சந்​தித்​துக் கொண்​டிருக்​கிற பாமக-வுக்கு மக்​கள் மத்​தி​யில் இருக்​கும் அந்த இமேஜை மாற்ற வேண்​டும் என்​ப​தற்​காக இரு​வ​ரும் சேர்ந்து நாடகம் ஆடு​கி​றார்​கள். பாட்​டிலால் தாயை அடித்​தார் என்று குற்​றம் சாட்​டப்​பட்ட நிலை​யில் தாயின் பிறந்த நாளை அனை​வ​ரும் சேர்ந்து கொண்​டாடு​கி​றார்​கள். இதை நாம் எப்​படி பார்ப்​பது? இப்​படி நாடகம் போட்​டு​விட்டு தேர்​தல் நேரத்​தில் பெட்டி வாங்​கும் விஷ​யத்​தைப் பொறுத்து இரு​வ​ரும் இணைந்​து​விடு​வார்​கள். அவர்​கள் வன்​னிய மக்​களுக்​காக செயல்​பட​வில்​லை. ஓட்​டுக்​காக​வும் நோட்​டுக்​காக​வும் தான் செயல்​படு​கி​றார்​கள்.

இரு​வ​ரும் ஒன்று சேர்ந்​து​விடு​வார்​கள் என்று எதை வைத்து சொல்​கிறீர்​கள்?

தனி​யாக பிரிந்து நின்​றால் பாமக அழிந்​து​விடும் என்​பது இரு​வ​ருக்​கும் தெரி​யும். அது​மட்​டுமில்​லாமல், ஐயா இருந்​தால் தான் உங்​களு​டன் கூட்​ட​ணி, ஐயா வரா​மல் நான் யாருட​னும் பேச மாட்​டேன் என்று எடப்​பாடி​யார் சொல்​லி​விட்​டார். தேர்​தல் ஆணை​யம் வேண்​டு​மா​னால் அன்​புமணிக்கு சாதக​மாக இருக்​கலாம். ஆனால் தேர்​தல் வந்து அன்​புமணி போய் ஓட்டு கேட்​டால் அவருக்​காக யாரும் ஓட்டு போட மாட்​டார்​கள். அதனால் இரு​வ​ரும் ஒன்று சேர்ந்​து​தான் ஆகவேண்​டும்.

இரு​வரில் நீங்​கள் யாரை ஆதரிப்​பீர்​கள்?

அப்​படி ஒரு நிலை என்​றால் அன்​புமணியை நீக்​கும் ஐயா​வின் முடிவை ஆதரிப்​போம். ஐயா​வின் உழைப்​பு, அவரது எண்​ணம் ஆகிய​வற்​றால் தான் வன்​னியர் சங்​கம், பாமக ஆகியவை உரு​வானது. வன்​னியர்​கள் அனை​வ​ருமே பாமக​வுக்​காக உழைத்​திருக்​கி​றார்​கள். அன்​புமணி வன்​னியர்​களுக்​காக​வும் பாமக-வுக்​காக​வும் எதை​யும் செய்​த​தில்​லை. அன்​புமணியை நிரந்​தர​மாக நீக்​குங்​கள் என்று தான் ஐயா​விடம் கேட்​கி​றோம்.

உங்​களின் திமுக ஆதரவு நிலைப்​பாட்​டுக்கு என்ன காரணம்?

வன்​னியர்​களுக்​காக 10.5 சதவீத உள் ஒதுக்​கீட்டை திமுக தான் நடை​முறைப்​படுத்​தி​யது. இட ஒதுக்​கீடு கேட்டு போராடி குண்​டடிபட்டு இறந்த தியாகி​களுக்கு ஓய்​வூ​தி​யம் தந்​திருக்​கிறது, நினைவு மண்​டபம் அமைத்​திருக்​கிறது. மீண்​டும் 10.5% இட ஒதுக்​கீடு தரு​வ​தாக சொல்லி இருக்​கி​றார்​கள். இப்​போதைய நிலை​யில் திமுக தான் வன்​னியர்​களுக்கு அதி​கம் செய்​திருக்​கிறது. இது​மட்​டுமில்​லாமல் மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட மக்​களுக்கு 27% இட ஒதுக்​கீட்டை கொடுத்​ததும் கலைஞர் ஐயா​தான். அதி​முக எதை​யும் செய்​ய​வில்​லை.

10.5 சதவீத உள் ஒதுக்​கீட்டை அதி​முக தானே அறி​வித்​தது?

தேர்​தலுக்​காக, தேர்​தல் ஆணை​யத்​தின் நடத்தை விதி​கள் அமலுக்கு வரு​வதற்கு ஒரு மணி நேரத்​திற்கு முன்​பாக வெறுமனே அறி​வித்​து​விட்டு போய்​விட்​டார்​கள். அதை திமுக அரசு வந்து தான் செயல்​படுத்​தி​யது. நீதி​மன்​றத்​தின் மூலம் அது ரத்து செய்​யப்​பட்​டிருந்​தா​லும் அதை மீண்​டும் சரி செய்ய வேண்​டும் என்று திமுக-வை நாங்​கள் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கி​றோம்.

வன்​னிய மக்​களை நீங்​கள் உங்​கள் அணி​யில் ஒரு​முக​மாக திரட்​டும் யோசனை ஏதும் வைத்​திருக்​கிறீர்​களா?

ஆம், நாங்​கள் 25 தியாகி​களின் குடும்​பங்​களை ஒருங்​கிணைத்து தனிக்​கட்சி ஆரம்​பிக்க இருக்​கி​றோம். வரும் தேர்​தலில் எங்​கள் கட்​சி​யும் போட்​டி​யிடும். டெல்​லி​யில் அதற்​கான வேலை​களை செய்​து​விட்​டோம். இத்​தனை நாளும் நாங்​கள் அமைப்​பாக ஒன்று சேரா​மல் தனித் தனி மனிதர்​களாக செயல்​பட்​டுக் கொண்​டிருந்​தோம். இனி, எனது சகோ​தரர் கனல் அரசன் உட்பட எனது அப்​பாவை நேசித்த அனை​வ​ரும் ஒன்​றிணைந்து செயல்​படப் போகிறோம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x