Published : 27 Aug 2025 07:49 AM
Last Updated : 27 Aug 2025 07:49 AM

28, 29-ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

சென்னை: தமிழக பதிவுத்​துறை தலை​வர் தினேஷ் பொன்​ராஜ் ஆலிவர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: சுப முகூர்த்த தினங்​கள் என கருதப்​படும் நாட்​களில் அதிக அளவில் பத்​திரப்​ப​திவு​கள் நடை​பெறும் என்​ப​தால், அந்​நாட்​களில் மக்​களின் கோரிக்​கையை ஏற்று கூடு​தல் முன்​ப​திவு டோக்​கன்​கள் ஒதுக்​கப்​படு​கிறது.

எனவே, ஆவணி மாத சுப​முகூர்த்த தினங்​களான வரும் 28, 29-ம் தேதி​களில் மக்​கள் கோரிக்​கையை ஏற்​று, ஒரு சார்​ப​தி​வாளர் உள்ள அலு​வல​கங்​களுக்கு 100-க்கு பதில் 150 முன்​ப​திவு டோக்​கன்​கள், 2 சார் பதி​வாளர் உள்ள அலு​வல​கங்​களுக்கு 200-க்கு பதில் 300 முன்​பதிவு டோக்​கன்​கள், அதிக அளவில் பத்​திரப்​ப​திவு​கள் நடை​பெறும் 100 அலு​வல​கங்​களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களு​டன், கூடு​தலாக 4 தட்​கல் டோக்​கன்​களும் மக்​கள் பயன்​பாட்​டுக்​காக வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x