Published : 27 Aug 2025 07:44 AM
Last Updated : 27 Aug 2025 07:44 AM

தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை: பள்​ளி​களில் காலை உணவின் தரத்தை உயர்த்​தாமல் அத்​திட்​டத்தை விரிவுபடுத்​து​வது பெரிய அளவில் பலன் அளிக்காது என்று பாஜக தமிழக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார்.

தமிழக முதல்​வரின் காலை உணவு திட்​டம் நகர்ப்​பகு​தி​களில் உள்ள அரசு உதவி​பெறும் பள்​ளி​களுக்​கும் நேற்று விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டது. இத்​திட்​டத்தை சென்​னை​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்​கி​வைத்​தார். இந்​நிலை​யில், காலை உணவு திட்​டம் விரி​வாக்​கம் செய்​யப்​படு​வது குறித்து தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

தேசிய கல்விக் கொள்​கை​யின் ஓர் அங்​க​மான காலை உணவுத் திட்​டத்தை நகர்ப்​புறங்​களி​லுள்ள அரசு உதவி​பெறும் பள்​ளி​களுக்​கும் விரி​வாக்​கம் செய்​திருக்​கும் தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். அதோடு தங்​கள் மனதுக்கு நிறை​வான இந்​நன்​னாளில், சமீபத்​தில் தாராபுரம் அரசுப் பள்​ளி​யிலும் திரு​வாரூர் பூனா​யிருப்பு அரசுத் தொடக்​கப் பள்​ளி​யிலும் வழங்​கப்​பட்ட காலை உணவில் பல்லி விழுந்து கிடந்​ததை நினை​வூட்ட விரும்​பு​கிறேன்.

இவை வெறும் எடுத்​துக்​காட்​டுச் சம்​பவங்​களே. காலை உணவில் நடக்​கும் அனைத்து குளறு​படிகளை​யும் வரிசைப்​படுத்த வேண்​டுமென்​றால் சீனப் பெருஞ்​சுவர் போதாது என்​பதே உண்​மை.

பிஞ்​சுக் குழந்​தைகளின் பசி​யாற்ற வேண்​டிய காலை உணவில் புழு முதல் பல்லி வரை கிடக்​கிறதே, அது திமுக அரசின் விழிகளுக்குப் புல​னாக​வில்​லை​யா? ஊட்​டச்​சத்து மிக்​க​தாக இருக்க வேண்​டிய உணவை நெடுந்​தூரத்​தில் இருந்து சமைத்​துக் கொண்டு வந்து ஊசிப்​போன உணவாக மாற​விடு​வது தான் திமுக அரசின் சாதனை​யா, உணவு எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் கொடுக்​கலாம், அரசு பள்​ளி​களில் படிப்​பது ஏழை எளிய குழந்​தைகள் தானே என்ற அலட்​சி​யமா அல்​லது போலி விளம்​பரங்​களின் மூலம் காலை உணவில் நடக்​கும் குளறு​படிகளை மறைத்​து​விடலாம் என்ற எண்​ண​மா? இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x