Published : 27 Aug 2025 07:14 AM
Last Updated : 27 Aug 2025 07:14 AM

கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பிக்கும் இணையதளத்தை முடக்கி வைத்திருப்பது ஏன்? - அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​கீழ் 25 சதவீத ஒதுக்​கீட்​டில் மாணவர்​கள் விண்​ணப்​பிக்க வழி​யில்​லாமல் அதற்கான இணை​யதள பக்​கத்தை முடக்கி வைத்​திருப்​பது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பியுள்​ளனர். கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடஒதுக்​கீட்​டில் ஏழை, எளிய மாணவர்​களுக்கு சேர்க்​கைக்​கான இணை​யதள பக்​கம் முடக்​கப்​பட்​டுள்​ள​தாக​ கூறி கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்க நிர்​வாகி வே.ஈஸ்​வரன் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், கல்வி உரிமை சட்​டத்​தின்​படி மத்​திய அரசு உரிய நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்​டும் என்​றும், தமிழக அரசும் நிதி கிடைப்​பதை காரணம் காட்​டா​மல் நிதியை வழங்க வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டிருந்​தது.

இந்த உத்​தரவை தமிழக அரசு அமல்​படுத்​த​வில்லை எனக்​கூறி மனு​தா​ரர் தரப்​பில் பள்​ளிக்​கல்​வித்​துறை செயலர் சந்​திரமோகன், தனி​யார் பள்​ளி​களின் இயக்​குநர் குப்​பு​சாமி ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதனை நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி​நா​ராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது.

தனி​யார் பள்​ளி​கள் இயக்​குநர் தாக்​கல் செய்​திருந்த பதில் மனு​வில், மத்​திய அரசு தனது பங்​களிப்பு நிதி​யான 60 சதவீதத்தை ஒதுக்​காத​தால் கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​துக்​கான இடஒதுக்​கீட்டை அமல்​படுத்த இயல​வில்லை என தெரி​வித்​திருந்​தார். அரசு தரப்பு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன், கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்தை அமல்​படுத்​து​வ​தில் மத்​திய அரசுக்​கும் பங்​குள்​ளது என்​றார்.

அதையடுத்து நீதிப​தி​கள், ஏழை, எளிய மாணவர்​கள் விண்​ணப்​பிக்க வழி​யின்றி இணை​யதள பக்​கத்தை முடக்கி வைத்​திருப்​பது ஏன் என்​றும் மாணவர்​களின் நலனைக் கருத்​தில் கொண்டு வரட்டு கவுர​வம் பார்க்​காமல் தமிழக அரசு இணை​யதள பக்​கத்தை செயல்​படுத்த வேண்டும் என்றும் கூறினர். அதற்கு அரசு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர், மாணவர்​களின் நலனில் அரசு அக்​கறை கொண்​டுள்​ளது. தமிழக அரசுக்கு எந்த கவுர​வப் பிரச்​சினை​யும் இல்​லை, என்​றார். அதையடுத்து வி​சா​ரணை​யை வரும்​ செப்​.9-க்​கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x