Published : 26 Aug 2025 05:38 AM
Last Updated : 26 Aug 2025 05:38 AM

மேட்டூர் அனல்மின் நிலைய உலர் சாம்பல் விற்பனை முறைகேடு: ஆவணங்களுடன் ஆஜராக டான்ஜெட்கோ இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறியிருப்பதாவது: தமிழக மின்​வாரி​யத்​துக்கு சொந்​த​மான மேட்​டூர், எண்​ணூர், துாத்​துக்​குடி உள்​ளிட்ட 5 அனல்​மின் நிலையங்களில் வெளி​யாகும் உலர் சாம்​பலில், 20 சதவீதம் சிறுமற்​றும் குறுந்​தொழில் நிறு​வனங்​களுக்கு இலவச​மாக வழங்கப்படுகிறது. மீத​முள்ள உலர் சாம்​பல் மற்ற நிறு​வனங்​களுக்கு விற்​கப்​படு​கிறது.

இந்த நடை​முறையை பின்​பற்​றாமல் சேலம் மாவட்​டம் மேட்​டூர் அனல்​மின் நிலை​யத்​திலிருந்து வெளி​யாகும் உலர் சாம்​பல் சிறு மற்றும் குறு நிறு​வனங்​களுக்கு பகிர்ந்து அளிக்​கப்​ப​டா​மல் நேரடி​யாக தனி​யார் நிறு​வனம் ஒன்​றுக்கு மொத்​த​மாக சட்​ட​விரோதமாக குறைந்த விலைக்கு விற்​கப்​படு​கிறது. பின்​னர் அந்த நிறு​வனம் உலர் சாம்​பலை வெளி​மார்க்​கெட்​டில் அதிக விலைக்கு விற்​கிறது.

உரிய நடவடிக்கை... இந்த முறை​கேடு தொடர்​பாக கடந்த ஜன.31 அன்று டான்​ஜெட்கோ இயக்​குநருக்கு புகார் அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. எனவே, இதுதொடர்​பாக உரிய நடவடிக்கை எடுக்க டான்​ஜெட்கோ இயக்​குநருக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், மனு​தா​ரரின் குற்​றச்​சாட்டு தொடர்​பாக உரிய ஆவணங்​களு​டன் பதிலளிக்கடான்​ஜெட்கோ இயக்குநருக்கு உத்​தர​விட்​டிருந்​தது. இந்​நிலை​யில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்தது.

அப்​போது நீதிப​தி​கள், மனு​தா​ரரின் குற்​றச்​சாட்டு தொடர்​பாக உரிய விசா​ரணை நடத்​தி, ஆவணங்​களை தாக்​கல் செய்ய கடந்​த ​முறை உத்​தர​விட்​டும், இன்​னும் தாக்​கல் செய்​யப்​பட​வில்​லை. எனவே உலர் சாம்​பல் ஒதுக்​கீடு தொடர்​பான உரிய ஆவணங்​களு​டன் டான்​ஜெட்கோ இயக்​குநர் இன்று (ஆக.26) ஆஜராக வேண்​டும் என உத்​தர​விட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x