Published : 26 Aug 2025 05:39 AM
Last Updated : 26 Aug 2025 05:39 AM

அரசு சார்பில் சென்னை இதழியல் நிறுவனம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோட்டூர்புரத்தில் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். உடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சென்னை இதழியல் நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவர் ‘இந்து’ என்.ரவி, விஜய் வசந்த் எம்.பி., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன் உள்ளிட்டோர்.

சென்னை: சென்னை இதழியல் நிறு​வனத்தை கோட்​டூர்​புரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: செய்​தித் துறை மானியக் கோரிக்​கை​யில், இதழியல் துறை​யில் பயிற்​சி, ஆராய்ச்சி மற்​றும் ஊடகக் கல்வி மேம்​பாட்​டுக்கு ஒருமுதன்​மை​யான கல்வி நிறு​வனத்தை நிறு​வி, அதன்​மூலம் ஆர்​வம் மிகுந்த இளம் திறமை​யாளர்​களை ஊக்​குவிக்​க​வும், இதழியல் மற்​றும் ஊடக ஆய்​வியலில் தரமான கல்​வியை வழங்​கும் வகை​யிலும், இதழியல் மற்​றும் ஊடக​வியல் கல்வி நிறு​வனம் இக்​கல்​வி​யாண்டு முதல் தொடங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

அதன்​படி, இதழியல் துறை​யில் ஆர்​வ​முள்ள இளைய தலை​முறை​யினரை ஊக்​குவிக்​கும் நோக்​குட​னும், தற்​போது வளர்ந்து வரும் தொழில்​நுட்ப வளர்ச்​சிக்​கேற்ப, ஊடகக் கல்​வியை வழங்​கு ​வதற்​காக​வும், தமிழகத்​தைச் சேர்ந்த இளைய தலை​முறை​யினருக்கு குறைந்த கட்​ட​ணத்​தில், ஓர் ஆண்டு இதழியல் முது​நிலை பட்​டயப் படிப்பு வழங்​கப்பட உள்​ளது. இதற்​காக, சென்​னை, கோட்​டூர்​புரத்​தில் அண்ணா நூற்​றாண்டு நூல​கம் அரு​கில் தமிழக அரசு சார்​பில் சென்னை இதழியல் கல்வி நிறு​வனம் அமைக்​கப்​பட்​டு, அதற்​காக ரூ.7.75 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிறு​வனத்​தில் இதழியல் முது​நிலை பட்​டயப் படிப்பு இந்த கல்​வி​யாண்டு முதல் (2025-26) தொடங்​கப்​படு​கிறது. இங்கு தமிழ் மற்​றும் ஆங்​கிலம் மொழி​யில் பயிற்​று​விக்​கப்​படும். இந்​நிறு​வனத்​தில் அச்​சு, தொலைக்​காட்​சி, வானொலி மற்​றும் இணைய ஊடகங்​களில் பணிபுரிவதற்​கான திறமையை வளர்த்​துக்​கொள்​ளும் வகை​யில் பாடத்​திட்​டம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. சர்​வ​தேச கல்வி நிறு​வனங்​களு​டன் இந்​நிறு​வனம் ஒப்​பந்​தம் செய்​து​கொள்ள உள்​ளது.

இந்​நிலை​யில், இந்த கல்வி நிறு​வனத்தை கோட்​டூர்​புரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​து, பார்​வை​யிட்​டார். தொடர்ந்​து, இக்​கல்வி நிறு​வனத்​தில் இதழியல் முது​நிலை பட்​டயப் படிப்​பில் முதலா​மாண்டு சேர்க்கை பெற்ற மாணவ, மாண​வியர்​களிடம் முதல்​வர் கலந்​துரை​யாடி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி, துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் மு.பெ.​சாமி​நாதன், மா.சுப்​பிரமணி​யன், செய்​தித்​துறை செயலர் வே.​ராஜா​ராமன், சென்னை இதழியல் நிறு​வனத்​தின் சிறப்பு பணி அலு​வலர் எஸ்​.ஏ.​ராமன், செய்​தித்​துறை இயக்​குநர் இரா.​வைத்​தி​நாதன், சென்னை இதழியல் கல்வி நிறு​வனத்​தின் நிர்​வாகக் குழுத் தலை​வர் என்​.ர​வி, தலைமை இயக்​குநர் ஏ.எஸ்​.பன்​னீர்​செல்​வன் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x