Published : 26 Aug 2025 05:19 AM
Last Updated : 26 Aug 2025 05:19 AM

வைக்கம் விருதுக்கு செப்.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: ‘வைக்​கம் விருது’க்​கான விண்​ணப்​பங்​களை செப்​.10-ம் தேதிக்​குள் அனுப்​பலாம் என தலை​மைச் செய​லா​ளர் நா.​முருகானந்​தம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி, சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ‘‘சமூக நீதிக்​காக வைக்​கத்​தில் போராடிய பெரி​யாரை நினை​வு​கூரும் வகை​யில், பிற மாநிலங்​களில் ஒடுக்​கப்​பட்​ட​வர்​கள் நலனுக்​காகப் பாடு​பட்​டு, குறிப்​பிடத்​தக்க மாற்​றத்தை ஏற்​படுத்​தும் ஆளு​மை​கள் அல்​லது நிறு​வனங்​களுக்கு ஆண்​டு​தோறும் ‘வைக்​கம் விருது’ சமூகநீதி நாளான செப்​.17-ம் தேதி அரசால் வழங்​கப்​படும்’’ என்று 110-​வி​தி​யின் கீழ் அறி​வித்​தார்.

அந்த வகை​யில் நடப்​பாண்​டும் ரூ.1 லட்​சம் பரிசுத் தொகை மற்​றும் தங்​கப் பதக்​கம் உள்​ளடக்​கிய விருது முதல்​வ​ரால் வழங்​கப்​பட​விருக்​கிறது. இதற்​கான விண்​ணப்​பத்தை சமர்ப்​பிக்க விரும்​புவோர், மாவட்ட ஆட்​சி​யர் பரிந்​துரை மற்​றும் சம்​பந்​தப்​பட்ட ஆவணங்​களு​டன், பொதுத்​துறை செய​லா​ளரிடம் செப்​.10-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x