Published : 26 Aug 2025 04:50 AM
Last Updated : 26 Aug 2025 04:50 AM

நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழகத்​தில் நகர்ப்​புற அரசு உதவி பெறும் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத்​திட்​டத்தை பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான் முன்​னிலை​யில், முதல்​வர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று தொடங்கி வைக்​கிறார். திட்​டத்​தின் 5-ம் கட்ட விரி​வாக்​கத்​தால் 750 கூடு​தல் சமையலறை​கள் உரு​வாக்​கப்பட உள்​ளன.

தமிழகத்​தில் நகர்ப்​புறங்​களில் உள்ள 2,430 அரசு உதவி பெறும் பள்​ளி​களில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 3.05 லட்​சம் மாணவ, மாண​வியருக்கு முதல்​வரின் காலை உணவுத்​திட்ட விரி​வாக்​கத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று காலை சென்னையில் தொடங்கி வைக்​கிறார்.

காலை 8.30 மணிக்​கு, மயி​லாப்​பூர், புனித சூசையப்​பர் தொடக்​கப்​பள்​ளி​யில் நடை​பெறும் விழா​வில், பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் ஆகியோர் பங்​கேற்​கின்​றனர். இந்​நிலை​யில், இதுகுறித்து தமிழக அரசின் செய்​தித் தொடர்பு அதி​காரி​யும், வரு​வாய்த்​துறை செயலரு​மான பி.அ​முதா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வரின் காலை உணவுத்​திட்​டத்​தில் 5-வது கட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது. ஏற்​கெனவே 4 கட்​டங்​கள் செயல்​படுத்​தப்​பட்​டுள்​ளன. கடந்த 2022 மே 7 ம் தேதி 110 விதி​யின்​கீழ் சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர், காலை உணவு திட்​டத்தை அறி​வித்​தார்.

தொடர்ந்து அதே ஆண்டு செப்​.15-ம் தேதி மதுரை, ஆதி​மூலம் தொடக்​கப்​பள்​ளி​யில் தொடங்​கப்​பட்​டது. முதல்​கட்​ட​மாக, 1,545 பள்ளி​களில் செயல்​படுத்​தப்​பட்​டது. இதில் நகராட்​சி, மாநக​ராட்​சி, கிராமப்​புறங்​கள், மலைப்​பகுதி பள்​ளி​களில் சில​வற்​றில் செயல்​படுத்​தப்​பட்​டது. நல்​ல​முறை​யில் செயல்​பட்​ட​தால், விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டது.

கடந்த 2023 மார்ச் 1-ம் தேதி 433 பள்ளிகளில், 56,160 ​குழந்​தைகள் பயன்பட்டனர். ​2023 ஆக25-ல் அனைத்து அரசு தொடக்​கப் பள்​ளி​களி​லும் இந்​தத் திட்​டம் விரிவாக்கம் செய்​யப்​பட்​டது. இதன் மூல​மாக, மொத்​தம் 30,992 பள்​ளி​கள் இந்​தத் திட்​டத்​தில் இணைக்​கப்​பட்டு 15.32 லட்​சம் குழந்தைகள் பயன் பெற்​றனர்.

3.05 லட்​சம் குழந்​தைகள்: அதன்​பின் 4-ம் கட்​ட​மாக, கிராமப்​புறங்​களில் அரசு உதவி​பெறும் பள்​ளி​களில், கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டது. இதில், 3,995 பள்​ளி​களில் 2.21 லட்​சம் குழந்​தைகள் பயன்​பெற்​றனர். நான்கு கட்​டங்​களில் 34,987 பள்​ளி​கள் இந்த திட்​டத்​தின் கீழ் சேர்க்​கப்​பட்டு இது​வரை 17 லட்​சத்து 53,257 குழந்​தைகள் பயன் பெற்​றுள்​ளனர்.

தற்​போது கூடு​தலாக 3.05 லட்​சம் குழந்​தைகள் பயன்​பெற உள்​ளனர். இந்​தத் திட்​ட​மானது குறிப்​பாக, பொது​மக்​களிட​மும், குழந்​தைகளிட​மும், ஆசிரியர்​களிட​மும், தாய்​மார்​களிட​மும் நல்ல வரவேற்​பைப் பெற்​றுள்​ளது என்​பது மாநில திட்​டக்​குழு​வின் ஆய்​வின் மூலம் தெரிய​வந்​தது.

குறிப்​பாக, வகுப்​பறை​களில் உன்​னிப்​பாக பாடங்​களை கவனிப்​பதுடன், அவர்​களுக்கு நோய் எதிர்ப்பு சக்​தி​யும் அதி​கரிப்​ப​தாக தெரிய வந்​துள்​ளது. கிச்​சடி, உப்​புமா போன்​றவற்​றுடன் காய்​கறிகள் நிறைந்த சாம்​பார் சேர்த்து வழங்​கப்​படு​கிறது. இதனால் பள்​ளிக்​ குழந்​தைகள் விரும்பி உண்​கின்​றனர்.

மேலும், தற்​போது காலை உணவுத் திட்​டத்​தின்​கீழ், சென்​னை​யில் 35 சமையலறை​கள், இதர இடங்​களில் 32,375 இடங்​களி​லும் உணவு சமைக்​கப்​படு​கிறது. நகர்ப்​புறங்​களில் உதவி பெறும் பள்​ளி​களில் காலை உணவுத் திட்​டம் விரி​வாக்​கப்​படு​வ​தால், 750 சமையலறை​கள் கூடு​தலாக ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இதன்​படி, காலை உணவுத் திட்​டத்​துக்கு மொத்​த​மாக 33,323 சமையலறை​களில் உணவு சமைக்​கப்பட உள்​ளது. இவ்​வாறு வரு​வாய்த்​துறை செயலர் பி.அ​முதா தெரி​வித்​தார்​. உடன்​, சமூக நலத்​துறை செயலர்​ ஜெய​முரளிதரன்​ இருந்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x