Published : 25 Aug 2025 08:04 PM
Last Updated : 25 Aug 2025 08:04 PM
விருதுநகர்: ஆபரேஷன் சிந்தூர் பணியிலிருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணு வீரர் சரண் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த ராமசாமி - வீரஓவம்மாள் தம்பதியின் மகன் சரண் (29). இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி பவித்ரா (24), 11 மாத பெண் குழந்தை சஸ்டிகா ஆகியோர் உள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ முகாமில் 54 ஆர்.ஆர் பிரிவில் பணியாற்றி வந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றினார்.
இந்நிலையில், கடந்த ஆக.22-ம் தேதி ஜம்மு - காஷ்மீரில் பணியிலிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இவரது உடல் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்துக்குக் கொண்டுவரப்பட்டது. நேற்று ராணுவ மரியாதையுடன் சரண் உடல் தகனம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT