Published : 25 Aug 2025 03:24 PM
Last Updated : 25 Aug 2025 03:24 PM
சென்னை: தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ வரும் 9.01.2026-ஆம் தேதி பிற்பகல் 02.45 மணியளவில் கட்சிப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட தலைமைக் கழகம், மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளைக் கழகம், மகளிர் அணியினர் மற்றும் கட்சத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாநாட்டை வெற்றியடைய செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் பிறந்த நாளான இன்று கட்சியின் மாநாடு தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகியிருப்பது அவரின் தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT