Published : 25 Aug 2025 05:30 AM
Last Updated : 25 Aug 2025 05:30 AM

ராயப்பேட்டை - ராதாகிருஷ்ணன் சாலை வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி விரைவில் நிறைவு

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரையி​லான 3-வது வழித்​தடத்​தில், ராயப்பேட்டை - ராதாகிருஷ்ணன் சாலை வரையி​லான சுரங்​கப்​பாதை பணி இந்த மாத இறு​திக்​குள் நிறைவடை​யும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

சென்​னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம், 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. அதாவது, மாதவரம் - சிறுசேரி சிப்​காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்​தடம், கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்​தடம், மாதவரம் - சோழிங்​கநல்​லூர் வரை (44.6 கி.மீ.) 5-வது வழித்​தடம் ஆகிய​வற்​றில் மொத்​தம் 118 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்​கத் திட்​ட​மிட்​டு, பணி​கள் நடை​பெறுகின்​றன. பல்​வேறு இடங்​களில் சுரங்​கப்​பாதை, உயர்​மட்​டப் பாதை, மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்​கும் பணி​கள் முழு​வீச்​சில் நடை​பெறுகின்​றன.

இந்​நிலை​யில், 3-வது வழித்​தடத்​தில் ஒரு பகு​தி​யாக ராயப் ​பேட்​டையி​லிருந்து ராதாகிருஷ்ணன் சாலை (ஆர்​.கே. சாலை) நோக்கி 966 மீ. வரையி​லான சுரங்​கப்​பாதை அமைக்​கும் பணி இறு​திக் கட்​டத்தை எட்​டி​யுள்​ளது.

இப்​பணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ம் தேதி தொடங்​கியது. இந்​த பணி​யில் ‘பவானி’ என்ற சுரங்​கம் தோண்​டும் இயந்​திரம் ஈடு​பட்​டுள்​ளது. தற்​போது, இந்த இயந்​திரம் டாக்​டர் ராதாகிருஷ்ணன் சாலை நிலை​யத்​துக்கு மிக அரு​கில் இருக்​கிறது. இந்த மாத இறு​திக்​குள் பணியை முடிக்​க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த குறிப்​பிட்ட தடத்​தில் பாறை மற்​றும் களிமண் இருக்​கும் என்​றும், சுரங்​கப்​பாதை அமைக்​கும் பணி கடின​மாக இருக்​கும் என்​றும் எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், புவி​யியல் சவால்​கள் இல்​லாமல் மிக​வும் மென்​மை​யான பகு​தி​யாக இருந்​தது.

இப்​பாதை பெரும்​பாலும் மணல் மற்​றும் வண்​டல் மண் கொண்​டது. சுரங்​கம் தோண்​டும் இயந்​திரம் எந்த இடையூறுகளை​யும் சந்​திக்​க​வில்​லை. தற்​போது இப்​பணி இறு​திக் கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. விரை​வில் ராதாகிருஷ்ணன் சாலை மெட்ரோ நிலை​யத்தை வந்​தடைந்​து​விடும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

ஒ.டி.ஏ. நங்​கநல்​லூர் சாலை மெட்​ரோவுக்கு புதிய நுழைவு வாயில் அமைக்க ஒப்​பந்​தம்: ஒ.டி.ஏ. நங்​கநல்​லூர் சாலை மெட்ரோ ரயில் நிலை​யத்​தில் புதிய நுழைவு வாயில் அமைக்க, ஸ்ரீ ராதா கன்​ஸ்ட்​ரக் ஷன்ஸ் நிறு​வனத்​துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்​வாகம் ரூ.8.52 கோடி​யில் ஒப்​பந்​தம் வழங்​கி​யுள்​ளது. இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: இது​வரை நங்​கநல்​லூர் சாலை மெட்ரோ நிலை​யத்​துக்கு ஒரே ஒரு நுழைவு வாயில் மட்​டுமே இருக்​கிறது.

இப்​போது கட்​டப்​பட​வுள்ள இந்த கூடு​தல் நுழைவு வாயில், ஜி.எஸ்​.டி. சாலை​யின் இரு​புறங்​களி​லும் நிலை​யத்தை எளி​தாக அணுகு​வதற்​கான வசதியை வழங்​கும். இந்த புதிய வசதி, குறிப்​பாக நெரிசல் மிகுந்த நேரங்​களில் ஏற்​படும் கூட்ட நெரிசலைக் குறைப்​ப​தோடு, அரு​கிலுள்ள குடி​யிருப்பு மற்​றும் வர்த்​தகப் பகு​தி​களுக்கு தடையற்ற இணைப்பை ஏற்​படுத்​தும். இதனால்​ தினசரி மெட்​ரோ பயணி​கள்​ பயன்​பெறு​வார்கள் என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x