Published : 25 Aug 2025 05:57 AM
Last Updated : 25 Aug 2025 05:57 AM

அரசு ஊழியர்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது துறை ரீதியான நடவடிக்கையை தொடரலாம்: ஐகோர்ட்

மதுரை: அரசு ஊழியர் மீதான வழக்கு நிலு​வை​யில் இருக்​கும்​போது, அவர்​கள் மீது துறை ரீதி​யான நடவடிக்​கையை தொடரலாம் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. புதுக்​கோட்​டை​யில் உதவி தொடக்​கக் கல்வி அலு​வல​ராகப் பணிபுரிந்​தவர் பொன்​னழகு. இவர் லஞ்ச ஒழிப்பு வழக்​கில் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். அதை ரத்து செய்​து, ஓய்​வு​பெற அனு​ம​தித்​து, அனைத்து பணப் பலன்​களை​யும் வழங்க உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

இதை விசா​ரித்த தனி நீதிப​தி, “லஞ்ச ஒழிப்பு டிஎஸ்​பி, மனு​தா​ரர் மீதான வழக்​கின் விசா​ரணையை 4 மாதத்​தில் முடித்​து, நீதி​மன்றத்​தில் குற்​றப்​பத்​திரி​கை​யைத் தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை​யில் மனு​தா​ரர் விடுவிக்​கப்​பட்​டால், பணி​யிடை நீக்கத்தை ரத்து செய்து ஓய்​வூ​தி​யப் பலன்​களை வழங்க வேண்​டும்” என உத்​தர​விட்​டார்.

இதை எதிர்த்து தொடக்​கக் கல்வி இயக்​குநர் மேல்​முறை​யீட்டு மனுத் தாக்​கல் செய்​தார். இதை விசா​ரித்து நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: அரசு ஊழியர் மீதான குற்​ற​வியல் நடவடிக்கை​யும், துறை ரீதி​யான நடவடிக்​கை​யும் வெவ்​வேறானது.

குற்ற வழக்​குப் பதிவு செய்​யும்​போது சம்​பந்​தப்​பட்ட அரசு ஊழியர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​படு​கிறார். ஒரே நேரத்​தில் குற்றவியல் நடவடிக்​கை​யும், துறை ரீதி​யான விசா​ரணை​யை​யும் மேற்​கொள்​ளலாம். இதற்​குத் தடை​யில்​லை.

லஞ்ச வழக்​கின் விசா​ரணையை 4 மாதங்​களில் முடித்து நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டும் என தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவு தேவையற்​றது. குற்​றப்​பத்​திரி​கை​யில் மனு​தா​ரர் விடுவிக்​கப்​பட்​டால், ஓய்​வூ​தி​யப் பலன்​களை வழங்க வேண்​டும் என உத்​தர​விடப்​பட்​டது உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​புக்கு எதி​ரானது.

குற்ற வழக்​கில் ஒரு​வரைத் தண்​டிக்க சரி​யான ஆதா​ரம் வேண்​டும். துறை ரீதி​யான விசா​ரணை​யின்​போது அது​போன்ற ஆதா​ரம் தேவை​யில்​லை. லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை கைவிடப்​பட்​டாலும், தவறான நடவடிக்​கைக்​காக அரசு ஊழியரைத் தண்​டிக்​கலாம்.

குற்ற வழக்​கில் பின்​பற்ற வேண்​டிய நடை​முறை​களை​யே, ஒழுங்கு நடவடிக்​கை​யிலும் பின்​பற்ற வேண்​டும் என்​பதை ஏற்க முடியாது. குற்ற வழக்​கில் விடு​தலை​யா​னாலும், அது துறை ரீதி​யான விசா​ரணைக்​குத் தடை​யாக இருக்​காது. தனி நீதிப​தி​யின் உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது. மேல்​முறை மனு ஏற்​கப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தர​வில் கூறி​யுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x