Published : 25 Aug 2025 05:14 AM
Last Updated : 25 Aug 2025 05:14 AM

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்ணு தலை​யில் ஏற்​பட்ட காயத்​துக்​காக, மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் இரா.நல்​ல​கண்​ணு, கடந்த 22-ம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில் தலை​யில் காயம் ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் சென்னை நந்​தனத்​தில் உள்ள வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

தலை​யில் தையல் போடப்​பட்​டு, தீவிர சிகிச்​சைப் பிரி​வில் இருக்​கும் அவரை மருத்​து​வர்​கள் குழு​வினர் கண்​காணித்து வருகின்றனர். மேலும், 100 வயதாகி​யுள்ள அவருக்கு வயது மூப்பு காரண​மாக உடம்​பில் ஏற்​பட்​டுள்ள மற்ற சில பிரச்​சனை​களுக்​காக நரம்​பியல், நுரை​யீரல், இதயம் மருத்துவ நிபுணர்​கள் குழு​வினர் சிகிச்சை அளித்து வரு​கின்​றனர்.

அவரது உடல் நிலை​யில் நல்ல முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. இன்​னும் ஓரிரு நாளில் அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்​பு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது என மருத்​து​வ​மனை இயக்​குநரும், மூத்த இதய சிகிச்சை நிபுணரு​மான மருத்​து​வர் தில்லை வள்​ளல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x