Published : 25 Aug 2025 05:10 AM
Last Updated : 25 Aug 2025 05:10 AM

கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது அறிவிப்பு: விருதாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: கரூரில் நடைபெறும் திமுக முப்​பெரும் விழா​வில் கனி​மொழி எம்.பி.க்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. அனைத்து விருதாளர்களுக்கும் முதல்​வர் ஸ்​டா​லின் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக திமுக தலை​மையகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வரும் செப்​.17-ம் தேதி கரூரில் நடை​பெறும் திமுக முப்​பெரும் விழாவையொட்​டி, விருது பெறு​வோரின் பட்​டியல் வெளி​யிடப்​படு​கிறது.

அதன்​படி, பெரி​யார் விருதுக்கு திமுக துணை பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி, அண்ணா விருதுக்கு தணிக்​கைக்​குழு முன்​னாள் உறுப்​பினர் சுப.சீத்​தா​ராமன், கலைஞர் விருதுக்கு முன்​னாள் எம்​எல்ஏ சோ.​மா.​ராமச்​சந்​திரன், பாவேந்​தர் விருதுக்கு தலை​மைச் செயற்​குழு உறுப்​பினர் குளித்​தலை சிவ​ராமன், பேராசிரியர் விருதுக்கு மருதூர் ராமலிங்​கம், மு.க.ஸ்​டா​லின் விருதுக்கு முன்​னாள் அமைச்​சர் பொங்​கலூர் நா.பழனிச்​சாமி ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

விரு​தாளர்​களுக்கு வாழ்த்து தெரி​வித்து முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட சமூகவலைதள பதி​வில், “கருப்​பு- சிவப்​புப் பாதை​யில் கொள்கை நடை​போடும் தீரர்​களுக்கு விருதுகளை அறி​வித்​துள்​ளது தலை​மையகம். விரு​தாளர்​கள் அனை​வருக்​கும் வாழ்த்​துகள்” என தெரி​வித்​துள்​ளார்.

விருதுக்கு நன்றி தெரி​வித்து கனி​மொழி வெளி​யிட்ட பதி​வில், “பெரி​யார் விருதுக்கு என்னை தேர்வு செய்​திருக்​கும் முதல்​வர், அண்ணன் மு.க.ஸ்​டா​லினுக்​கும், கட்​சித் தலை​மையகத்​துக்​கும் எனது நன்​றி. விரு​தாளர்​கள்​ அனை​வருக்​கும்​ வாழ்த்​துகள்" என கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x