Published : 25 Aug 2025 01:18 AM
Last Updated : 25 Aug 2025 01:18 AM

​​​​​​​விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு: பயணிகள் குற்றச்சாட்டு

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்தி விடு​முறையையொட்டி ஆம்னி பேருந்து கட்​ட​ணம் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ள​தாக பயணி​கள் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர்.

சென்​னை, பெங்​களூரு உள்​ளிட்ட ஊர்​களில் கல்​வி, பணி நிமித்​த​மாக தங்​கி​யிருப்​பவர்​கள் விடு​முறையையொட்டி சொந்த ஊர்​களுக்​குச் செல்​வது வழக்​கம். அந்த வகை​யில் வரும் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்​டாடப்​படு​கிறது. இது ஒரு நாள் விடு​முறை​யாக இருந்​தா​லும், மேலும் இரண்டு நாள் விடுப்பு எடுத்து சொந்த ஊர்​களுக்கு பயணிக்க மென்​பொருள் நிறுவன ஊழியர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினரும் தயா​ராகி​விட்​டனர். இதைப் பயன்​படுத்தி ஆம்னி பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. சென்​னை​யில் இருந்து திருச்சி செல்​ல அதி​கபட்​ச​மாக ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்​கப்​படு​கிறது.

ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​களின் விலைப்​பட்​டியலின்​படி, இருக்​கை​யில் பயணிக்க அதி​கபட்​ச​மாக ரூ.1,320 வசூலிக்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், தற்​போது அதி​கபட்​ச​மாக ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்​கப்​படு​கிறது. இதேபோல், அதிநவீன சொகுசு பேருந்​துகளில் படுக்​கை​யில் பயணிக்க ரூ.1,840 வசூலிக்​கப்​படும் என கூறப்​பட்ட நிலை​யில் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்​கப்​படு​கிறது.

இவ்​வாறு விநாயகர் சதுர்த்​திக்கு முந்​தைய நாள் சென்​னை​யில் இருந்து திருச்சி செல்​ல​வும், மீண்​டும் ஞாயிறன்று (ஆக.31) திருச்​சி​யில் இருந்து சென்னை செல்​ல​வும் இதே அளவு கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தின் பிற முக்​கிய நகரங்​களுக்​கும் இதில் குறை​வில்​லாத வகை​யில் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படு​வ​தாக பயணி​கள் வேதனை தெரிவிக்​கின்​றனர்.

இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் கூறும்​போது, “விழா நாட்​களில்​தான் பயணி​கள் கூட்​டம் அதி​க​மாக இருக்​கும். எனவே, சாதாரண நாட்​களில் ஏற்​படும் இழப்பை இந்த நாட்​களில் தான் ஈடு செய்​ய​முடி​யும். அதே​நேரம், சங்க உறுப்​பினர்​கள் யாரும் நிர்​ண​யித்​ததை​விட அதிக கட்​ட​ணம் வசூலிப்​ப​தில்​லை. அவ்​வாறு வசூலிப்​பதை அறிந்​தால் நாங்​களே போக்​கு​வரத்து அதி​காரி​களுக்கு புகாரளிக்​கிறோம். விநாயகர் சதுர்த்தி நாளில் குறைந்​த​பட்ச கட்​ட​ணத்​தி​லும் ஏராள​மான பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. அவற்​றுக்​கான முன்​ப​திவு தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது” என்​றனர்.

இதுதொடர்​பாக அரசு போக்​கு​வரத்து அதி​காரி​கள் கூறும்​போது, “தொடர் விடு​முறை நாட்​களில் அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​கள் சார்​பாக சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன. படுக்கை வசதி கொண்ட பேருந்​துகளை அதிகரிக்​க நடவடிக்கை எடுத்து வரு​கிறோம். ஆம்னி பேருந்​துகளில் அதிக கட்​ட​ணம் குறித்து 1800 425 6151 என்ற எண்​ணில் புகாரளிக்​கலாம்” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x