Published : 25 Aug 2025 01:15 AM
Last Updated : 25 Aug 2025 01:15 AM

35 அரசுத் துறைகளில் ஏஐ வளர்ச்சியை மேம்படுத்த பயிலரங்குகள்: பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: தமிழகத்​தில் ஏஐ வளர்ச்​சியை மேம்​படுத்த, 35 அரசுத் துறை​கள், 38 புத்​தொழில் நிறு​வனங்​களில் தமிழ்​நாடு செயற்கை நுண்​ணறிவு இயக்​கம் மூலம் பயிலரங்​கு​கள் நடத்​தப்​பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: தமிழக தகவல் தொழில்​நுட்​பத் துறை​யின்​கீழ் இயங்கி வரும் ஐடிஎன்டி மையம், ஐசிடி அகாட​மி, எல்​காட் நிறு​வனம் ஆகிய​வற்​றுடன் இணைந்து செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) சார்ந்த புது​மை​களு​டன் ஆட்சி நிர்​வாகத்தை மேம்​படுத்த ரூ.13.93 கோடி​யில் தமிழ்​நாடு செயற்கை நுண்​ணறிவு இயக்​கம் கடந்த 2024-ல் தொடங்​கப்​பட்​டது. ஏஐ மூலம் சமூக சவால்​களை எதிர்​கொண்​டு, மக்​களுக்கு வழங்​கும் சேவை​களை மேம்​படுத்த இந்த இயக்​கம் ஏற்​படுத்​தப்​பட்​டது.

38 புத்​தொழில் நிறு​வனங்கள்: அதன்​படி, தேவை​யான பயிற்​சிகளை அளித்​து, ஆராய்ச்​சிகள், புது​மை​கள், திறன் மேம்​பாடு​களை ஊக்​கு​வித்​து, ஆட்சி நிர்​வாகம், மருத்​து​வம், பாது​காப்பு உள்​ளிட்​ட​வற்​றில் எழும் சிக்​கல்​களுக்கு ஏஐ மூலம் தீர்வு காண்​ப​தற்​கான கட்​டமைப்பை இந்த இயக்​கம் உரு​வாக்கி வரு​கிறது. அந்த வகை​யில், தமிழகத்​தில் ஏஐ வளர்ச்​சியை மேம்​படுத்​தும் வகை​யில் தமிழ்​நாடு மின்​ஆளுமை முகமை, ஐசிடி அகா ட​மி, ஐடிஎன்டி மையம், எல்​காட் ஆகிய​வற்​றுடன் இணைந்து 35 அரசுத் துறை​கள், 38 புத்​தொழில் நிறு​வனங்​களில் ஏஐ பயிலரங்​கு​கள் நடத்​தப்​பட்​டன.

இதன்​மூலம் 30 முக்​கிய ஏஐ தொழில்​நுட்​பத்​தின் பயன்​பாடு​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளன. அதே​போல, மருத்​து​வம், வேளாண்​மை, கல்​வி, மின்​ஆளுமை ஆகிய​வற்​றில் ஏஐ மூலம் தீர்வு காண வகை செய்​தல், முன்​னணி தொழில் நிறு​வனங்​களு​டன் இணைந்து ஏஐ, இயந்​திர​வியலில் ஆராய்ச்​சிகள் மேற்​கொள்​ளுதல், தமிழ்​நாடு தரவு பகிர்வு தளத்தை மேம்​படுத்​துதல், திறன் போட்​டிகள், விழிப்​புணர்வு பிரச்​சா​ரங்​கள் மூலம் மாணவர்​களிடம் ஏஐ திறன்​களை வளர்த்​தல் போன்​றவற்​றை​யும் இந்த இயக்​கம் மேற்​கொண்டு வரு​வது குறிப்​பிடத்​தக்​கது. இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x