Published : 24 Aug 2025 07:08 PM
Last Updated : 24 Aug 2025 07:08 PM
மதுரை: ‘அடக்கி வாசிங்க ப்ரோ’ என்ற வாசகத்துடன் தவெக தலைவர் விஜய்யை கண்டித்து திமுகவினர் மதுரையில் போஸ்டர்களை ஓட்டியுள்ளனர். திமுகவினர் ஒட்டும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
மதுரை அருகே பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி தவெக கட்சியின் மாநில மாநாடு நடந்தது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, திமுக ஆட்சியை பல்வேறு நிலையில் விமர்ச்சித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என்றும் மேடையில் பேசினார். சர்ச்சைக்குரிய இப்பேச்சுக்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் விஜய்யை கண்டிக்கும் வகையில் தொடர்ந்து திமுகவினர் பேசுகின்றனர். இதன் தொடர்ச்சியாக மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதியில் தவெக தலைவர் விஜய்யை விமர்ச்சித்தும், அவரை எச்சரிக்கும் விதமாகவும் திமுகவினர் சுவரொட்டிகளை ஓட்டியுள்ளனர். அதில் ‘வாட் ப்ரோ, ஓவர் ப்ரோ, அடக்கி வாசிங்க ப்ரோ ’ போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
மதுரை மாநாட்டில் விஜய்யின் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக திமுகவினர் ஒட்டும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT