Published : 24 Aug 2025 12:22 AM
Last Updated : 24 Aug 2025 12:22 AM

அமித் ஷா ஆயிரம் முறை தமிழகம் வந்தாலும் பாஜக காலூன்ற முடியாது: செல்வப்பெருந்தகை கருத்து

சென்னை: அமித் ஷா 1000 முறை வந்​தா​லும் தமிழகத்​தில் பாஜக​வால் காலூன்ற முடி​யாது என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: நெல்​லை​யில் நேற்று முன்​தினம் பாஜக கூட்​டத்​தில் உரை​யாற்​றிய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட திமுக அரசை அகற்​று​வோம் என்​றும், அதி​முக-​பாஜக கூட்​டணி ஆட்சி அமைக்​கும் என்​றும் அதி​கார மமதை​யுடன் பேசி​யிருக்​கிறார்.

தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிக்கு வர வேண்​டுமென்று கூறும் அமித் ஷா, அதி​முக முதல்​வர் வேட்​பாளர் பழனி​சாமி பெயரைக்​கூட உச்​சரிக்​க​வில்லை. அதி​முக தலை​மையோ,உள்​துறை அமைச்​சரின் அதி​காரத்​துக்கு கட்​டுப்​பட்​டு, அமலாக்​கத் துறை, வரு​மான வரித்​துறை​களில் இருந்து தங்​களை காப்​பாற்​றிக் கொள்ள பொருந்​தாக் கூட்​டணி அமைத்​திருக்​கிறார்​கள். இத்​தகைய சந்​தர்ப்​ப​வாத கூட்டணியை மக்​கள் நிராகரிப்பார்கள்.

திமுக ஆட்​சி​யில் ஊழல் நிறைந்​துள்​ள​தாக அமித் ஷா கூறி​யுள்​ளார். கடந்த 4 ஆண்​டு​களுக்கு மேலாக திமுக ஆட்​சி​யில் ஊழல் நடந்​துள்​ள​தாக எந்த வழக்​கும், எந்த நீதி​மன்​றத்​தி​லும் நிலு​வை​யில் இல்​லை. ஆனால், 11 ஆண்​டு​கால பாஜக ஆட்​சி​யில் ரபேல் விமான ஊழல், தேர்​தல் நன்​கொடை பத்​திர மோசடி என பல மோசடிகள் நடந்​துள்​ளன.

தேர்​தல் ஆணை​யம் மூலம் வாக்​கு​களை திருடி ஆட்​சிக்கு வந்த நரேந்​திர மோடி, அமித்ஷா உள்​ளிட்​டோரின் அவதூறு கட்​டுக்​கதைகளை தமிழக மக்​கள் நம்ப தயா​ராக இல்​லை. தமிழ் மொழிக்​காக பரிந்து பேசும் அமித் ஷா, அதற்​காக ரூ.20 கோடி நிதியை மட்​டுமே ஒதுக்கினார். எனவே, அவரது பேச்சை தமிழக மக்​கள் ஒரு​போதும் ஏற்​க​மாட்​டார்​கள். அமித் ஷா ஆயிரம் முறை வந்​தா​லும், தமிழகத்​தில் பாஜக காலூன்ற முடி​யாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x