Published : 24 Aug 2025 12:19 AM
Last Updated : 24 Aug 2025 12:19 AM

மாநிலக் கல்விக்கொள்கை சமத்துவமான திறன்சார் கல்வியை வலுப்படுத்தும்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழகத்​தில் அனைத்து மாணவர்​களும் சமத்​து​வ​மான கல்வி பெறு​வதை மாநிலக் கல்விக் கொள்கை- 2025 மேம்​படுத்​தும் என்று அன்​பில் மகேஸ் தெரி​வித்​துள்​ளார்.

தேசி​யக் கல்விக் கொள்​கைக்கு மாற்​றாக தமிழகத்​துக்​கென பிரத்​யேக மாநிலக் கல்விக் கொள்​கை-2025 வடிவ​மைக்​கப்​பட்டு தமிழக அரசால் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பான சந்​தேகங்​கள், கேள்வி​களை ஆசிரியர்​கள், மாணவர்​கள் உள்​ளிட்​டோர் பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸிடம் கேட்​டிருந்​தனர். அதற்கு அவர் அளித்த பதில்​கள்:

மாநில கல்விக் கொள்கை சமச்​சீர் கல்வி முறை​யில் எத்​தகைய மாற்​றங்​களை ஏற்​படுத்​தும்?
- க.செல்​வசிதம்​பரம், ஆசிாி​யர், திரு​வாரூர்

சமச்​சீர் கல்வி முறை​தான் தமிழகத்​தின் முது​கெலும்​பாக திகழ்​கிறது. அதை மேலும் வலுப்​படுத்​தும் வித​மாகவே மாநிலக்​கல்விக் கொள்கை மூலம் உரு​வாக்க பெறும் பாடத்​திட்​டம் அமை​யும். அவை திறன்​சார்ந்த கற்​பித்​தலை​யும், எதிர்​காலத் தேவை மற்​றும் சவால்​களைக் கருத்​தில் கொண்​டும் வடிவ​மைக்​கப்​படும். இந்த ஓரே மாதிாி​யான பாடத்​திட்​டம் அனைத்து பள்​ளி​களி​லும் மாணவர்​கள் சமத்​து​வ​மான கல்வி பெறு​வதை உறு​தி​செய்​யும்.

மாநில கல்விக் கொள்​கைக்​கும் தற்​போதைய நிலை​மைக்​கும் இடையே உள்ள முக்​கிய வித்​தி​யாசம் என்ன?
- வி.பூஜா, பிளஸ் 1 மாண​வி, திருப்​பத்​தூர்

தற்​போதைய கல்​வி​முறை வலு​வான சமத்​து​வ​மிக்க கட்​டமைப்பை கொண்​டுள்​ளது. எனினும், கரோனா தொற்று காலத்​துக்​குபின் கற்​றலில் ஏற்​பட்ட இடைவெளி​களை முழு​மை​யாக சாிசெய்ய வேண்​டும். தொழில்​நுட்ப வழி மற்​றும் எதிர்​காலத் தேவை​களுக்​கான கற்​பித்​தலை​யும் செம்​மைப்​படுத்த வேண்​டிய அவசி​ய​முள்​ளது. அதனடிப்​படை​யில்​தான் மாநில கல்விக் கொள்​கை​யானது 3 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை பாடத்​திட்​டம் புதுப்​பிப்​படும்.

மாநிலக் கல்விக் கொள்​கை, தேசி​யக் கல்விக் கொள்​கை​யுடன் எவ்​வாறு மாறு​படு​கிறது?
- செ.சந்​தி​யா, பிளஸ் 2 மாண​வி, தேனி

தேசி​யக் கல்விக் கொள்கை நாடு முழு​வதும் ஒரே மாதிாி​யான கல்வி முறையை அமல் செய்ய முயற்​சிக்​கிறது. ஆனால், கல்​வியென்​பது ஒவ்​வொரு மாநிலத்​தின் தன்​மைக்​கேற்ப வழங்​கப்பட வேண்​டும். எனவே​தான் நம் மாநிலத்​துக்​கென தனி கல்விக் கொள்​கையை உரு​வாக்​கி​யுள்​ளோம். தேசிய கல்விக் கொள்கை திணிக்க நினைக்​கும் மும்​மொழிக் கொள்​கையை ஏற்​காமல் மாநில கல்விக்​கொள்கை இரு​மொழிக் கொள்கை பின்​பற்​றலை உறுதி செய்​கிறது. மேலும், தேசிய கல்விக்​கொள்கை நாடு முழு​வதும் ஒரே மாதிாி​யான பரந்த இலக்​கு​களை வழங்​கும்​போது, நாம் மாநிலத்​தின் சமூகம், பொருளா​தா​ரச் சூழலுக்கு ஏற்ப நமது திட்​ட​மிடல்​களை வடிவ​மைத்து வழங்​கு​கிறோம்.

மாநில கல்விக் கொள்​கை​யில் மதிப்​பீடு மற்​றும் தோ்வு​கள் எப்​படி மாறும்?
- வி.துர்​காதே​வி, ஆசிாி​யர், ஆரணி

மதிப்​பீடு​கள் என்​பது இனி மனப்​பாடத்​திறனை மட்​டும் சார்ந்​த​தாக இல்​லாமல் புாிந்து அறிதல், தீர்வு காணல், நடை​முறை பயன்​பாடு ஆகிய​வற்றை கொண்டுஅமை​யும். கல்வி செயல்​திறன்​களு​டன், வாழ்க்​கைத் திறன்​களை​யும் சோதித்து அறிவ​தாக பொதுத்​தர்வு மை​யும்.

சமச்​சீர் கல்வி பாடப்​புத்​தகங்​கள் மாற்​றப்​படு​மா?
- டி.சுபஸ்ரீ, பிளஸ் 2 மாண​வி, தஞ்​சாவூர்

இல்​லை. சமச்​சீர் கல்​வி​யின் பாடப்​புத்​தகங்​கள் அடிப்​படை பாடப்​பொருளாக இருக்​கும். ஆனால், 3 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை மாறிவரும் சூழலுக்​கேற்ப தொழில்​நுட்​பம், திறன்​கள் சார்ந்​தும், உள்​ளுர் சூழலுக்கு ஏற்​ப​வும் மாற்​றங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு அச்​சு, டிஜிட்​டல் வடி​விலும் கற்​றல் வளங்​கள் மேம்​படுத்​தப்​படும்.

மாநிலக் கல்விக் கொள்​கை​யில் கூறி​யுள்​ளது​போல், கிராமப்​புறப் பள்​ளி​கள் ரோபோடிக்​ஸ், செயற்கை நுண்​ணறிவு ஆய்வகங்களை எவ்​வாறு பெறும்?
- வி.ஆ.ஹர்​சி​தா, பிளஸ் 1 மாண​வி, காரமடை

டிஎன்​ஸ்​பார்க் விாி​வாக்​கம், வட்​டார அளவில் உயர்தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் அமைத்​தல் சிறிய கிராமப்​புற பள்​ளி​களுக்​கும் தொழில்​நுட்ப வசதி​கள் கிடைப்​பது உறுதி செய்​யப்​படு​கிறது. வான​வில் மன்​றம் மற்​றும் நடமாடும் ஆய்​வகங்​கள் மூல​மாக தொலை​தூரப் பகு​தி​யிலுள்ள பள்ளி மாண​வர்களுக்​கும் பயிற்சி அளிக்கப்படும்.

மாநில கல்விக் கொள்கை வழி​யாக பின்​தங்​கிய பிாி​வினருக்கு சமவாய்ப்பு எவ்​வாறு வழங்​கப்​படும்?
- எஸ்​.குமரேஸ்​வாி, ஆசிாி​யர், திருப்​பூர்

உதவித்​தொகை வசதி​கள் மேலும் விாி​வாக்​கம் செய்​யப்​படும். ஆண்​டு​தோறும் சமத்​துவ மதிப்​பாய்வு மூலம் எஸ்​சி, எஸ்டி மற்​றும் மாற்​றுத்​திற​னாளி மாண​வர்கள் எதிர்​கொள்​ளும் தடைகளை நீக்​கு​வதை உறுதி செய்​கிறோம். மேலும், மா​திாிப் பள்​ளி​கள் மற்​றும் வெற்​றிப் பள்​ளி​கள்​ முன்​னெடுப்​பு​களி​லும்​ உள்​ளடங்​கிய கல்​வியை முன்​னிலைப்​படுத்​துகிறோம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x