Published : 24 Aug 2025 12:10 AM
Last Updated : 24 Aug 2025 12:10 AM

தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

சென்னை: தனி​யாரிடம் இருந்து மின்​சா​ரம் கொள்​முதல் செய்​யக் கூடாது என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தனி​யாரிட​மிருந்து ரூ.80,000 கோடி செல​வில் 2,200 மெகா​வாட் மின்​சா​ரத்தை தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் கொள்​முதல் செய்ய இருப்​ப​தாக வெளிவந்​துள்ள செய்தி பல கேள்வி​களை எழுப்​பு​கிறது. ஆட்சி அமைப்​ப​தற்கு முன்பு ‘தனி​யாரிடம் மின்​சா​ரம் வாங்​கு​வதை குறைத்து மாசற்ற மின் உற்​பத்தி நிலை​யங்​கள் மூலம் 20,000 மெகா​வாட் மின் உற்​பத்தி செய்​யப்​பட்டு குறைந்த விலை​யில் மின்​சா​ரம் வழங்​கப்​படும்’ என்று திமுக வாக்​குறுதி எண் 231-ல் முழங்​கியது.

ஆனால் ஆட்​சிக் கட்​டிலில் ஏறியதும் அதற்கு நேர்​மாறாக, மின்​வாரி​யத்தை நஷ்டத்​தில் தள்​ளி, தனி​யாரிட​மிருந்து மின்​சா​ரத்தை வாங்​கி, விலையை உயர்த்​தி, மக்​கள் மீதும், அரசு மீதும் நிதிச்​சுமையை ஏற்றி வரு​கிறது. மாநிலத்​தின் கடன் சுமை​யை​யும் மக்​களின் மின்​கட்டண சுமை​யை​யும் ஒருசேர உயர்த்தி தமிழகத்தை இருளில் தள்​ளி​விட்​டு, விடியல் அரசு என்று வீண் பெருமை பேசலா​மா, மாதம் ஒரு​முறை மின்​கட்டண கணக்​கீடு என்று கொடுத்த வாக்​குறு​தியை மறந்து மக்​கள் நலனைத் தூக்​கியெறிந்த திமுக அரசுக்கு தனி​யாரிட​மிருந்து ரூ.80,000 கோடிக்கு மின்​சா​ரம் வாங்​கும் திட்​டத்​தை​யும் தூக்​கியெறிவ​தில் ஒன்​றும் சிரமம் இருக்​காது. எனவே, தனி​யாரிட​மிருந்து வாங்​கும் திட்​டம் இருந்​தால் அதைக் கைவிட வேண்​டும் என வலி​யுறுத்​துகிறேன்.
இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x