Published : 24 Aug 2025 12:08 AM
Last Updated : 24 Aug 2025 12:08 AM

ஆண்டுக்கு 6% சொத்து வரி உயர்வுக்கான அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: ஆண்​டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்​வுக்கு வழி​வகுக்​கும் அரசாணையை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னையை சேர்ந்த ஹரீஷ் சவுத்​திரி என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: மாநக​ராட்சி விதி​களின்​படி 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை​தான் சொத்​து​வரியை உயர்த்த வேண்​டும். ஆனால், தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் விதி 264 (2)-ல் 2023-ம் ஆண்டு திருத்​தம் செய்​து, தமிழகம் முழு​வதும் சொத்​து​வரி ஆண்​டுக்கு 6 சதவீதம் தானாக உயர்த்​தப்​படும் என்று 2024-ம் ஆண்டு செப்​.5-ம் தேதி அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு வரியை உயர்த்தி நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை பிறப்​பித்​துள்ள அரசாணை சட்​ட​விரோத​மானது.

வரியை உயர்த்​து​வதற்கு முன், அறி​விப்பு வெளி​யிட்டு பொது​மக்​களின் கருத்தை கேட்க வேண்​டும். அவ்​வாறு செய்​யாமல் சொத்து வரியை உயர்த்​தி​யது சட்​ட​விரோத​மாகும். எனவே, 6 சதவீத சொத்​து​வரியை தானாக உயர்த்த வழி​வகை செய்​யும் அரசாணையை ரத்து செய்ய வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவத்​ஸ​வா, நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் கொண்ட அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. மனுவுக்கு அரசு 4 வாரத்​துக்​குள் பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும் என உத்​தர​விட்ட நீதிப​தி​கள், வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x