Published : 24 Aug 2025 12:03 AM
Last Updated : 24 Aug 2025 12:03 AM

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாஜக அரசு தொடர்ந்து தொல்லை தருகிறது: முதல்வர் ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: எ​திர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களுக்கு நிர்​வாக, சட்ட ரீதி​யாக எண்​ணற்ற குறுக்​கீடு​கள், தடைகளை ஏற்​படுத்தி மத்​திய பாஜக அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரு​கிறது. மாநிலங்​களுக்கு உரிய நியாய​மான நிதி பங்​கீட்டை வழங்க மறுக்​கிறது என்று முதல்​வர் ஸ்டா​லி்ன் குற்​றம்​ சாட்​டி​யுள்​ளார்.

மத்​திய - மாநில உறவு​கள் குறித்த தேசிய கருத்​தரங்​கம் சென்னையில் நேற்று நடை​பெற்​றது. தலை​மைச் செயலர் முரு​கானந்​தம் வரவேற்​றார். மாநில உரிமை​களை பாது​காத்​து, மத்​திய - மாநில அரசுகள் இடையி​லான உறவை மேம்​படுத்​தும் நோக்​கில் தமிழக அரசு அமைத்​துள்ள உயர்​நிலைக் குழு​வின் தலை​வரும், உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிப​தி​யு​மான குரியன் ஜோசப் இக்​கருத்​தரங்​கின் நோக்​கம் குறித்து பேசி​னார். உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி ஜஸ்டி செலமேஸ்​வரும் பேசி​னார்.

மத்​திய - மாநில உறவு​கள் குறித்த உயர்​நிலைக் குழு​வுக்​கான பிரத்​யேக இணை​யதளத்தை இந்த கருத்​தரங்​கில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி வைத்​தார். அவர் பேசி​ய​தாவது: ஐ.நா. சபை​யின் மானிட மேம்​பாட்டு குறி​யீடு​களான தனி​நபர் வரு​மானம், கல்​வி, பொது சுகா​தா​ரம், பெண்​ணுரிமை, சுற்​றுச்​சூழல் பாது​காப்பு போன்ற குறி​யீடு​களில் தமிழகம் முதன்மை மாநில​மாக திகழ்​கிறது. மத்​திய அரசின் நேர்​முக வரி​களி​லும், ஜிஎஸ்டி வரி​களி​லும் அதிக வரு​மானத்தை ஈட்டி கொடுத்து வரு​கிறது. ஆனால், தமிழகத்​துக்கு மத்​திய அரசு உரிய நிதியை வழங்​காமல் குறுகிய அரசி​யல் நோக்​குடன் செயல்​படு​கிறது. பல்​வேறு நெருக்​கடிகளை​யும் மீறி மத்​திய அரசுடன் போராடி இந்த அரசு பல பொருளா​தார திட்​டங்​களை வெற்​றிகர​மாக நிறைவேற்​றி, கடந்த நான்​கரை ஆண்​டு​களாக சிறப்​பாக ஆட்சி நடத்தி வருகிறது.

காஷ்மீரில் மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஆட்​சியை கலைத்​து​விட்​டு, மத்​திய அரசின் நேரடி கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வந்​துள்​ளனர். இத்​தகைய ஜனநாயக விரோதப் போக்கை அப்​போதே கண்​டித்​தோம். இந்த நிலை தொடரக்​கூ​டாது, மாநிலங்​களின் உரிமை​கள் பறிக்​கப்​படக்​கூ​டாது என்ற உணர்​வில்​தான், நீதிபதி குரியன் ஜோசப் தலை​மை​யில் உயர்​நிலைக் குழுவை அமைத்​துள்​ளோம்.

‘அளவுக்கு மீறிய அதி​காரக் குவியல்​களால் மத்​திய அரசுக்கு ரத்​தக் கொதிப்​பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகை​யும் ஏற்​பட்​டுள்​ளது’ என்று சர்க்​காரியா ஆணைய அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. அதே​நேரம், மாநிலங்​களுக்கு அதிக அதி​காரங்​களை வழங்​கும் வகை​யில், அரசமைப்பு சட்​டத் திருத்​தங்​களை மேற்​கொள்ள உரிய பரிந்​துரைகளை அந்த ஆணை​யம் வழங்​க​வில்​லை. நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​படும் சட்​டங்​கள் மற்​றும் அரசமைப்பு சட்​டத் திருத்​தங்​கள் மூல​மாக மத்​திய அரசிடம் அதி​காரங்​கள் தொடர்ந்து குவிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

மத்​தி​யில் கடந்த ஐக்​கிய முற்​போக்கு கூட்​டணி ஆட்​சி​யின்​போது, திமுக வலி​யுறுத்​தலின்​பேரில் முன்​னாள் தலைமை நீதிபதி புஞ்சி தலை​மை​யில் ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது. நடுநிலை​யானவர்​கள் மற்​றும் மாநில முதல்​வர்​களு​டன் ஆலோ​சித்து ஆளுநர்​களை மத்​திய அரசு நியமிக்க வேண்​டும் என்று அந்த ஆணை​யம் பரிந்​துரை செய்​தது. அதை இது​வரை மத்​திய அரசு ஏற்​க​வில்லை என்​ப​தை, தற்​போதைய ஆளுநரின் செயல்​பாடு​கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பாஜக அல்​லாத எதிர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களுக்கு இது​போல நிர்​வாக, சட்ட ரீதி​யாகஎண்​ணற்ற குறுக்​கீடு​கள், தடைகளை ஏற்​படுத்தி மத்​திய அரசு தொடர்ந்து தொல்லை கொடுத்து வரு​கிறது. நிதி ஆணை​யங்​கள் சுதந்​திர​மாக செயல்​படு​வதை மத்​திய அரசு தடுக்​கிறது. மாநிலங்​களுக்கு உரிய நியாய​மான நிதி பங்​கீட்டை வழங்க மறுக்​கிறது. இதையெல்​லாம் மீறி, நிதிப் பற்​றாக்​குறை காலத்​தி​லும் சிறப்​பான நிதி மேலாண்மை மூல​மாக இந்த அரசு சிறந்த திட்​டங்​களை நிறைவேற்றி வரு​கிறது. இதனால், கடந்த 2024-25-ம் ஆண்​டில் 11.19 சதவீதம் எனும் இரட்டை இலக்க வளர்ச்​சி​யை, 14 ஆண்​டு​களுக்கு பிறகு தமிழகம் அடைந்​துள்​ளது.

இந்​தியை திணிப்​ப​தில் மத்​திய அரசு தீவிரம் காட்​டிய​போதும், பல்​வேறு போராட்​டங்​கள் மூல​மாக இந்தி மொழி திணிப்பை தமிழகம் முறியடித்​துள்​ளது. மாநில உரிமை​களுக்​காக மக்​கள்மன்​றத்​தி​லும், சட்​டப்​பேர​வை​யிலும் அனைத்​து​வித​மான ஆக்​கப்​பூர்​வ​மான, ஜனநாயக நடவடிக்​கைகளை​யும் தி​முக அரசு தொடர்ந்து எடுத்து வரு​கிறது. இவ்​வாறு முதல்​வர் பேசி​னார். இந்த நிகழ்​வில், முன்​னாள் நீதிப​தி​கள், அமைச்​சர்​கள், எம்​எல்​ஏக்​கள், சட்ட மாணவர்கள் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x