Published : 23 Aug 2025 06:34 AM
Last Updated : 23 Aug 2025 06:34 AM

சென்னை: தேங்கிய மழை தண்ணீரில் மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை: தேங்​கிய மழைத் தண்​ணீரில் மின்​சார கம்பி அறுந்து விழுந்த விபத்​தில் மின்​சா​ரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

சென்​னை​யின் பல்​வேறு பகு​தி​களில் நேற்று காலை இடி​யுடன் கூடிய திடீர் மழை கொட்​டியது. அதே​போல், கிழக்கு கடற்​கரைச் சாலை​யில் உள்ள ஈஞ்​சம்​பாக்​கத்​தி​லும் மழை பெய்து சாலைகளில் மழைநீர் தேங்​கியது. இந்​நிலையில், ஈஞ்​சம்​பாக்​கம் முனீஸ்​வரன் கோயில் தெரு​வில் வசித்து வந்த கொத்​த​னார் சாமுவேல் (57) என்​பவர், அதே பகு​தி​யில் உள்ள பிள்​ளை​யார் கோயில் தெரு வழி​யாக காலை 9.30 மணிக்கு வேலைக்கு நடந்து சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது பலத்த மழை​யி​னால் மின்​சார கம்பி அறுந்​து, அங்கு தேங்கி நின்ற தண்​ணீரில் விழுந்து கிடந்​தது. இதை கவனிக்​காத சாமுவேல் மழைத் தண்​ணீரில் கால் வைத்​தார். அடுத்த நொடியே மின்​சா​ரம் பாய்ந்து தூக்கி வீசப்​பட்​டார்.

அப்​பகுதி மக்​கள் அவரை மீட்டு உடனடி​யாக அங்​குள்ள ஆரம்ப சுகா​தார நிலை​யத்​துக்கு கொண்டு சென்​றனர். பரிசோ​தித்த மருத்து​வர்​கள் சாமுவேல் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர். இந்த விவ​காரம் தொடர்​பாக நீலாங்​கரை போலீ​ஸார் வழக்குப் பதிந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x