Published : 23 Aug 2025 10:19 AM
Last Updated : 23 Aug 2025 10:19 AM

உங்களுடன் ஸ்டாலின் திட்டமும்... உள்ளாட்சித் துறையினரின் புலம்பலும்!

மக்களைத் தேடி அரசு என்ற நோக்கில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ முகாம்களை தமிழகம் முழுக்க நடத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த முகாம்கள் மூலம் நகர் பகுதிகளில் 13 துறைகள் சார்ந்த 43 சேவைகளும், கிராமப் பகுதிகளில் 15 துறைகள் சார்ந்த 45 சேவைகளும் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

45 நாட்​களில் மனுக்​களுக்கு தீர்வு என அறிவிக்​கப்​பட்​டிருப்​ப​தால் அனைத்து இடங்​களி​லுமே இந்த முகாம்​களில் மக்​கள் கூட்​டம் அலை​மோதுகிறது. ஆனால் நவம்​பர் வரைக்​கும் இப்​படி 10 ஆயிரம் முகாம்​களை நடத்​தப் போவ​தாகச் சொல்லி இருக்​கும் அரசு, அதற்​கான நிதியை போதிய அளவில் ஒதுக்​காத​தால் அல்​லாடிக் கொண்​டிருப்​ப​தாக உள்​ளாட்சி மற்​றும் வரு​வாய்த்​துறை​யினர் புலம்​பித் தவிக்​கி​றார்​கள்.

உங்​களு​டன் ஸ்டா​லின் திட்ட முகாம்​களை அமைச்​சர்​கள், எம்​பி., எம்​எல்​ஏ-க்​கள், உள்​ளாட்சி பிர​தி​நி​தி​கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்​டும், முகாம் குறித்து பொது​மக்​கள் மத்​தி​யில் விழிப்​புணர்வை ஏற்​படுத்தி மக்​கள் பிரச்​சினை​களை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றெல்​லாம் திமுக-​வினருக்கு அக்​கட்​சி​யின் தலைமை உத்​தர​விட்​டுள்​ளது. ஆனால், எல்லா இடங்​களி​லும் ஆளும் கட்​சி​யினர் அப்​படி மெனக்​கிடு​வ​தாகத் தெரிய​வில்​லை.

பெரும்​பாலும் தனி​யார் திருமண மண்​டபங்​கள் உள்​ளிட்ட இடங்​களி​லேயே இந்த முகாம்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. ஒரு முகாமை நடத்த அரசு தரப்​பில், சம்​பந்​தப்​பட்ட உள்​ளாட்சி நிர்​வாகத்​துக்கு ரு.32 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்​கப்​படு​வ​தாகச் சொல்​கி​றார்​கள். ஆனால், உணவு, இணைய வசதி, உபகரணங்​கள், பந்​தல் என சர்​வ​சா​தா​ரண​மாக ரு.1 லட்​சத்தை தாண்​டி​விடு​கிற​தாம் செல​வு. இதனால் எஞ்​சிய தொகையை யார் கையில் இருந்து கொடுப்​பது என்று தெரி​யாமல் உள்​ளாட்​சித் துறை​யினர் கையை பிசைகி​றார்​கள். சில இடங்​களில் இதைச் சமாளிக்க, முகாம்​களில் உடனடி தீர்​வு​களைப் பெறும் பயனாளி​களிடம் தங்​களது கஷ்டத்​தைச் சொல்லி கையேந்​து​வ​தாக​வும் சொல்​கி​றார்​கள்.

மேலும், முகாம்​களில் பெறப்​படும் விண்​ணப்​பங்​களை உடனடி​யாக இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும் என்​ப​தா​லும், விடு​முறை நாட்​களி​லும் முகாம்​கள் நடத்​தப்​படு​வ​தா​லும் கூடு​தல் பணிச்​சுமை ஏற்​பட்டு தாங்​களும் பரித​விப்​ப​தாக வரு​வாய்த் துறை​யினரும் புலம்​பு​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய விருதுநகர் மாவட்ட உள்​ளாட்சி துறை அலு​வலர்​கள் சிலர், “தமி​ழ​கத்​தில் கடந்த அதி​முக ஆட்​சி​யில் பிரிக்​கப்​பட்ட 9 மாவட்​டங்​கள் தவிர்த்து எஞ்​சிய 27 மாவட்​டங்​களில் ஊரக உள்​ளாட்சி பிர​தி​நி​தி​களின் பதவிக்​காலம் கடந்த ஜனவரி 5-ம் தேதி​யுடன் முடிவுக்கு வந்​து​விட்​டது.

ஆனாலும், அவர்​களில் பெரும்​பாலான​வர்​கள் இன்​ன​மும் சம்​பந்​தப்​பட்ட ஊராட்​சிகளில் அதி​காரம் செலுத்​திக் கொண்​டிருக்​கி​றார்​கள். அவர்​கள் சொல்​லும் நபர்​களுக்​குத்​தான் காண்ட்​ராக்ட் பணி​கள் ஒதுக்​கப்​படு​கின்​றன. இப்​படி, தொடர்ந்து தங்​களுக்​கானதை சாதித்​துக் கொள்​ளும் அவர்​கள், உங்​களு​டன் ஸ்டா​லின் திட்ட முகாம்​களை செம்​மை​யாக நடத்த வேண்​டும் என அக்​கறைப்​படு​வதே இல்​லை.

அமைச்​சர்​கள், எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் பங்​கேற்​கும் முகாம்​களுக்கு மட்​டும் தேவை​யான ஏற்​பாடு​களை செய்து கொடுக்​கும் இவர்​கள், மற்ற முகாம்​களை கண்​டு​கொள்​வ​தில்​லை. இதனால் முகாமை நடத்​து​வதற்​கான செல​வு​களை சமாளிக்க முடி​யாமல் நாங்​கள் சிரமப்​பட்டு வரு​கி​றோம். இந்த சிக்​கலை சமாளிக்க முகா​முக்​கான செலவு தொகையை உயர்த்தி வழங்க வேண்​டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்​துள்​ளோம்” என்​ற​னர்.

வரு​வாய்த் துறை​யினரோ, “இம்​மு​காமில் அளிக்​கப்​படும் சுமார் 90 சதவீத சேவை​கள் வரு​வாய்த்​துறை சம்​பந்​தப்​பட்​டது. முகாமில் பெறப்​படும் மனுக்​களுக்கு 45 நாட்​களுக்​குள் தீர்வு காண வேண்​டும் என்று சொல்​லப்​படு​வ​தால் நாங்​கள் கடும் பணிச்​சுமைக்கு ஆளாகி வரு​கி​றோம். முகாம்​களுக்​காக எங்​களுக்கு தனி​யாக எந்த நிதி​யும் ஒதுக்​கு​வ​தில்​லை.

இதனால் செப்​டம்​பர் 3, 4 தேதி​களில் உங்​களு​டன் ஸ்டா​லின் திட்ட முகாம் உள்​ளிட்ட அனைத்​துப் பணி​களை​யும் புறக்​கணிக்​கும் போராட்​டத்​தில் ஈடுபடப் போவ​தாக அறி​வித்​திருக்​கி​றோம். எங்​களை போராட்​டத்​தில் குதிக்​க​வி​டாத அளவுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்​கும் என நம்​பு​கி​றோம்” என்​கி​றார்​கள்.

இதனிடையே, சிவகங்கை மாவட்ட உள்​ளாட்​சித் துறை அலு​வலர்​கள், முகாம்​களுக்​கான செலவு தொகையை உயர்த்தி வழங்​கக் கோரி ஒரு​நாள் மட்​டும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்​திருக்​கி​றார்​கள். அரசுத் துறை​யின் சேவை​களை மக்​களின் இருப்​பிடத்​துக்கே சென்று அளிக்க வேண்​டும் என்​ப​தற்​காக ‘உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தை’ செயல்​படுத்​திக் கொண்​டிருக்​கும் தமிழக அரசின் முயற்சி பாராட்​டுக்​குரியதே.

அதேசம​யம், இந்​தத் திட்​டத்தை செயல்​படுத்​தும் அலு​வலர்​களுக்கு இருக்​கும் நடை​முறை சிரமங்​களை​யும் புரிந்​து​கொண்டு அதை​யும் சரிசெய்ய நடவடிக்கை எடுத்​தால் திட்​டம் இன்​னும் சிறக்​குமே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x