Published : 23 Aug 2025 05:04 AM
Last Updated : 23 Aug 2025 05:04 AM

பழனிசாமியின் 4-ம் கட்ட பிரச்சாரம் செப்.1-ல் மதுரையில் தொடக்கம்

சென்னை: அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தனது 4-ம் கட்ட பிரச்​சா​ரத்தை செப்​.1-ம் தேதி மதுரை​யில் தொடங்​கு​கிறார். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை முன்னிட்டு கடந்த ஜூலை 7-ம் தேதி முதல்​ பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை கோவை​யில் தொடங்​கினார். அதைத்​தொடர்ந்​து, தற்போது 4-ம் கட்ட பிரச்​சா​ரத்தை செப்​.1-ம் தேதி மதுரை​யில் தொடங்க உள்​ளார்.

இதுதொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறி​விப்பு: அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, 4-ம் கட்ட பிரச்​சாரத்தை செப்​.1-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மேற்​கொள்​கிறார். 4-ம் தேதி மதுரை மாவட்​டம் திருப்​பரங்​குன்​றம், திரு​மங்​கலம், விருதுநகர் மாவட்​டம் திருச்​சுழி தொகு​தி​கள், 2-ம் தேதி மதுரை மேற்​கு, வடக்கு தொகு​தி​கள், 3-ம் தேதி மதுரை மாநகர், மதுரை மத்தியம், தெற்கு ஆகிய தொகு​தி​கள், 4-ம் தேதி சோழ​வந்​தான், உசிலம்​பட்​டி, தேனி மாவட்​டம் ஆண்​டிப்​பட்டி ஆகிய தொகு​தி​கள், 5-ம் தேதி தேனி மாவட்​டம் கம்​பம், போடி​நாயக்​க​னூர், பெரியகுளம் தொகு​தி​களில் பழனி​சாமி பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்.

செப்​.6-ம் தேதி திண்​டுக்​கல் மாவட்​டம் நத்​தம், திண்​டுக்​கல், நிலக்​கோட்டை தொகு​தி​களி​லும், 7-ம் தேதி ஆத்​தூர், ஒட்​டன்​சத்​திரம், பழநி தொகு​தி​கள், 9-ம் தேதி கோவை மாவட்​டம் தொண்​டா​முத்​தூர், கிணத்​துக்​கட​வு, 10-ம் தேதி பொள்​ளாச்​சி, வால்​பாறை, உடுமலைப்​பேட்​டை, 11-ம் தேதி மடத்​துக்​குளம், தாராபுரம், காங்​கே​யம், 12-ம் தேதி திருப்​பூர் தெற்​கு, திருப்​பூர் வடக்​கு, பல்​லடம் தொகு​தி​களி​லும் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார்​. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x