Published : 23 Aug 2025 04:47 AM
Last Updated : 23 Aug 2025 04:47 AM

சுகாதாரத் துறை பணிகளுக்கு 644 பேர் தேர்வு: நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சுகாதாரத் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 644 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். உடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்.பி., துறை செயலாளர் ப.செந்தில்குமார், மருந்து கட்டுப்பாடு இயக்குநர் (பொறுப்பு) ஆர்.லால்வேனா, மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத் தலைவர் உமா மகேஸ்வரி.

சென்னை: மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மற்​றும் டிஎன்​பிஎஸ்சி மூலம் சுகா​தா​ரத் துறை​யில் பல்​வேறு பணியிடங்களுக்குத் தேர்வு செய்​யப்​பட்ட 644 பேருக்கு பணி நியமன ஆணை​களை முதல்​வர் ஸ்​டா​லின் நேற்று வழங்​கி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான அரசு பொறுப்​பேற்ற 2021-ம் ஆண்டு மே முதல் இது​வரை மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக 4,576 உதவி மருத்​து​வர்​கள், 27 மாற்​றுத் திற​னாளி செவிலியர்​கள், 2,772 இதர மருத்​து​வம் சார்ந்த பணி​யாளர்​கள் உள்​ளடக்​கிய 7,375 பணி​யாளர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அதன் தொடர்ச்​சி​யாக, மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் மூல​மாக பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய் தடுப்பு இயக்​ககத்​துக்கு 182 உதவி மருத்​துவ அலு​வலர்​கள் (பொது), மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் இயக்​ககத்​துக்கு 48 பல் மருத்​து​வர்​கள், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​துக்கு 324 அறுவை அரங்கு உதவி​யாளர்​கள் மற்​றும் தமிழ்​நாடு சுகா​தார போக்​கு​வரத்து துறைக்கு ஒரு திறன்​மிகு உதவி​யாளர் நிலை-1 என 555 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

மேலும், தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூல​மாக மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககத்​துக்கு 18 உளவியல் உதவி பேராசிரியர்​கள் மற்​றும் மருத்​துவ உளவிய​லா​ளர்​கள், மருந்து கட்​டுப்​பாடு இயக்​ககத்​துக்கு 17 மருந்து ஆய்​வாளர்​கள், குடும்​பநல இயக்​ககத்​துக்கு 54 வட்​டார சுகா​தா​ரப் புள்​ளியி​லா​ளர்​கள் என 89 பேர் தேர்​வாகி​யுள்​ளனர். இவர்​கள் 644 பேருக்கு சென்​னை, மாநிலக் கல்​லூரி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், மேயர் ஆர்​.பிரி​யா, நாடாளு​மன்ற உறுப்​பினர் தயாநிதி மாறன், சென்னை மாநக​ராட்சி நிலைக்​குழு தலை​வர் சிற்​றரசு, சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், மருந்து கட்​டுப்​பாடு இயக்​குநர் ஆர்​.லால்​வே​னா உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

கட்​டிடங்​கள் திறப்பு: தமிழக ஊரக வளர்ச்​சித் துறை சார்​பில், தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் 2 ஊராட்சி ஒன்​றிய அலு​வல​கக் கட்​டிடங்​கள், கொட்​டாம்​பட்டி புதிய பேருந்து நிலை​யம், 66 புதிய பள்​ளிக் கட்​டிடங்​கள், 4 புதிய நூல​கக் கட்​டிடங்​கள், 49 பொது விநி​யோகக் கடைகள், 26 ஆரம்ப சுகா​தார நிலை​யக் கட்​டிடங்​கள், 25 உணவு தானிய சேமிப்பு கிடங்​கு​கள் உள்பட மொத்​தம் ரூ.104.24 கோடி மதிப்​பிலான கட்​டிடங்​களை நேற்று காணொலி​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

இது த​விர தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் 818 சாலை ஆய்​வாளர்​கள் பணி​யிடங்​களுக்கு தெரிவு செய்​யப்​பட்​ட​வர்​களுக்கு பணிநியமன ஆணை​களை​யும் வழங்​கி​னார். இந்து சமய அறநிலை​யத்​துறை சார்​பில் ரூ. 124.97 கோடி மதிப்​பில் 12 கோயில்​களில் 17 புதிய திட்​டப் பணி​களுக்​கான கட்​டு​மானப் பணி​கள் மற்​றும் ரூ.32.53 கோடி மதிப்​பில் ஆயிரம் ஆண்​டு​கள் பழமை​யான 9 கோயில்​களை அதன் பழமை மாறாமல் புனரமைக்​கும் வகையி​லான திருப்​பணி​களை​யும் தொடங்கி வைத்தார்.

அதே​போல், தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம், தமிழ்​நாடு சேமிப்​புக் கிடங்கு நிறு​வனம் ஆகியவை சார்​பில் ரூ.60.85 கோடியில் நவீன கிடங்​கு​களையும் முதல்​வர் காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார். மேலும், தமிழ்​நாடு சேமிப்​புக் கிடங்கு நிறு​வனத்​திலும் நுகர்​பொருள் வாணிபக் கழகத்​திலும் 55 பேருக்கு கருணை அடிப்​படை​யில் பணிநியமன ஆணை​களை​யும் வழங்​கி​னார். நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் ஐ.பெரி​யசாமி, எ.வ.வேலு, அர.சக்​கர​பாணி, ஆர்​.​காந்​தி, பி.கே.சேகர்​பாபு, சி.​வி.கணேசன் உள்​ளிட்​ட அரசு அதிகாரிகள்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x