Published : 23 Aug 2025 04:41 AM
Last Updated : 23 Aug 2025 04:41 AM

ஊ​ராட்​சிகளில் தூய்மைக் காவலர்களுக்கு வார விடுப்பு: சுழற்சி முறையில் வழங்க நடவடிக்கை

சென்னை: ஊ​ராட்​சிகளில் தூய்​மைக் காவலர்​களுக்கு சுழற்சி அடிப்​படை​யில் வாரம் ஒரு​நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சி ஆணை​யர் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்​து, மாவட்ட ஆட்​சி​யர்​கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அவர் அனுப்​பிய சுற்​றறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஊராட்​சிகளில் வீடு​தோறும் குப்பை சேகரிக்க வெளிநிர​வல் முறை​யில் கிராம வறுமை ஒழிப்பு சங்​கம் அல்​லது ஊராட்சி அளவி​லான கூட்​டமைப்​பு​கள் மூலம் தூய்​மைக் காவலர்​கள் பணி​யில் ஈடு​படுத்​தப்​படு​கின்​றனர்.

இந்​நிலை​யில், தமிழ்​நாடு மேல்​நிலை நீர்த்​தேக்​கத் தொட்டி இயக்​குபவர்​கள், தூய்​மைக் காவலர்​கள், தூய்​மைப் பணி​யாளர் சங்​கம், தூய்​மைக் காவலர்​களுக்கு விடு​முறை மற்​றும் விடுப்பு வழங்​கு​வது குறித்து கோரிக்கை விடுத்​துள்​ளது. எனவே, தூய்​மைக் காவலர்​கள் சுழற்சி முறை​யில் வாரம் ஒரு​நாள் விடுப்பு எடுக்​கலாம். இதற்கு மேல் கூடு​தலாக விடுப்பு எடுக்​கப்​பட்​டால் அவர்​களுக்கு ஒரு​நாள் ஊதி​ய​மாக ரூ.160 பிடித்​தம் செய்​யப்பட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x