Published : 22 Aug 2025 06:10 AM
Last Updated : 22 Aug 2025 06:10 AM

வேளாங்கண்ணிக்கு 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

சென்னை: ​விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஆண்​டு​தோறும் வேளாங்​கண்ணி புனித அன்னை ஆரோக்​கிய மாதா கோ​யில் திரு​விழாவை யொட்டி சிறப்​பு பேருந்​துகள் இயக்​கப்​படு​வது வழக்கம்.

அந்த வகை​யில் நடப்​பாண்​டும், சென்​னை, பெங்​களூரு, தூத்​துக்​குடி, கன்​னி​யாகுமரி, நாகர்​கோ​வில், திருச்​சி, தஞ்​சாவூர், சிதம்​பரம், புதுச்​சேரி, திண்​டுக்​கல், மணப்​பாறை, ஓரியூர் மற்​றும் பட்​டுக்​கோட்டை ஆகிய ஊர்​களி​லிருந்து வேளாங்​கண்​ணிக்கு ஆக.27 முதல் செப்​.10-ம் தேதி வரை 1,050 சிறப்​புப் பேருந்​துகள் இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த பேருந்​துகளில் முன்​ப​திவு செய்து பயணிக்​க​வும் வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. மேலும், குழு​வாக பயணம் செய்ய விரும்​புபவர்​களுக்கு ஒப்​பந்த அடிப்​படை​யிலும் பேருந்து இயக்​கப்​படு​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x