Published : 21 Aug 2025 06:25 AM
Last Updated : 21 Aug 2025 06:25 AM

நடைமேடை பணிகள் முடிந்ததால் மன்னை, செந்தூர் விரைவு ரயில்கள் விரைவில் எழும்பூரில் இருந்து இயக்கம்

சென்னை: எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மறுசீரமைப்பு பணி காரண​மாக மூடப்​பட்​டிருந்த 3, 4-வது நடைமேடைகள் ஓரிரு நாளில் திறக்​கப்பட உள்​ளன. இதையடுத்​து, மன்​னை, செந்​தூர் விரைவு ரயில்​கள் மீண்​டும் எழும்​பூரில் இருந்து இயக்​கப்பட உள்​ளன. சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ரூ.734.91 கோடி​யில் மறுசீரமைப்பு பணி நடந்து வரு​கிறது. இங்கு பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், வணிக வளாகம் அமைப்​பது உட்பட பல்​வேறு பணி​கள் நடை​பெறுகின்​றன.

இதுத​விர, 1 முதல் 11-வது நடைமேடை வரை இணைப்பு நடைமேம்​பாலம் அமைக்​கும் பணி​களும் தொடங்​கின. இதையொட்​டி, முதல்​கட்​ட​மாக, கடந்த ஜூன் முதல் வாரத்​தில் 1, 2-வது நடைமேடைகளும், பின்​னர் 3, 4-வது நடைமேடைகளும் மூடப்​பட்​டன. இதனால், எழும்​பூரில் இருந்து மன்​னார்​குடி செல்​லும் மன்னை விரைவு ரயில், திருச்​செந்​தூர் செல்​லும் செந்​தூர் விரைவு ரயில் உட்பட 6 ரயில்​கள் தாம்​பரம் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டன. எழும்​பூர் - புதுச்​சேரி விரைவு ரயில் உள்​ளிட்ட சில ரயில்​கள் கடற்​கரை நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டன.

இந்த நிலை​யில், அடித்​தளப் பணி​கள் முடிந்​து, 1, 2-வது நடைமேடைகள் கடந்த 4-ம் தேதி திறக்​கப்​பட்​டன. இதையடுத்​து, தேஜஸ் மற்​றும் புதுச்​சேரி விரைவு ரயில் ஆகியவை எழும்​பூரில் இருந்து மீண்​டும் இயங்​கத் தொடங்​கின. இதற்​கிடையே, 3, 4-வது நடைமேடைகளில் நடந்​து​வந்த பணி​கள் சமீபத்​தில் முடிவடைந்​த​தால், அந்த 2 நடைமேடைகளும் ஓரிரு நாளில் திறக்​கப்பட உள்​ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட அதி​காரி​கள் கூறிய​போது, “எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் 3, 4-வது நடைமேடை​யில் பணி​கள் முடிந்​து​விட்​ட​தால், ஒப்​பந்த நிறு​வனம் இந்த 2 நடைமேடைகளை​யும் 21-ம் தேதி (இன்​று) காலை ரயில்வே நிர்​வாகத்​திடம் ஒப்​படைக்​கும். 2 நடைமேடைகளும் ஓரிரு நாளில் திறக்​கப்​பட்​டு, மன்​னை, செந்​தூர் ஆகிய விரைவு ரயில்​கள் மீண்​டும் எழும்​பூரில் இருந்து இயங்​கத் தொடங்​கும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x