Published : 21 Aug 2025 05:43 AM
Last Updated : 21 Aug 2025 05:43 AM

குடியரசு துணைத் தலைவர் தேர்தலை கருத்தியல் யுத்தமாக முன்னெடுக்கும் இண்டியா கூட்டணி

சென்னை: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலை கருத்​தி​யல் யுத்​த​மாக முன்​னெடுக்க காங்​கிரஸ், திமுக கூட்​டணி திட்டமிட்டுள்ளது. தமிழகத்​தில் நடை​பெறவுள்ள சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு அதன் தொடர் நகர்​வாக குடியரசுத் துணைத் தலை​வர் வேட்​பாள​ராக மகா​ராஷ்டிரா ஆளுநர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறிவிக்​கப்​பட்​டார்.

இதன்​மூலம் பாஜக தலைமை தமிழகத்தை முக்​கிய இடத்​தில் வைத்​திருப்​ப​தாக​வும் ஒரு தமிழருக்கு குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் முக்​கி​யத்​து​வம் அளித்​திருப்​ப​தாக​வும் தேர்​தலின்​போது வலு​வான பிரச்​சா​ரத்தை முன்​னெடுக்க பாஜக திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தெரி​கிறது.

இதனால் இண்​டியா கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் யார் என்​ப​தற்​கான எதிர்​பார்ப்பு கிளம்​பியது. திமுக எம்​.பி. திருச்சி சிவா வேட்​பாளர் போட்​டி​யில் இருப்​ப​தாக பேச்​சுக்​களும் எழுந்​தன. இந்​நிலை​யில், உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்​டியை இண்​டியா கூட்​டணி அறி​வித்​தது. இந்த அறி​விப்​புக்கு முன் பல்​வேறு நிகழ்​வு​கள் அரங்​கேறி​யுள்​ள​தாக இண்​டியா கூட்​ட​ணி​யினர் தெரி​வித்​துள்​ளனர்.

அதன் விவரம்: தொடக்​கத்​தில் இருந்தே இண்​டியா கூட்​ட​ணித் தலை​வர்​களுக்​குள் சுமூக​மான நிலை இல்​லை. திமுக கூட்​டணி சார்​பில் சார்​பில் மயில்​சாமி அண்​ணாதுரை பெயர் முன்​மொழியப்​பட்​டது. அவ்​வாறு தமிழர் ஒரு​வரை நிறுத்​தும்​பட்​சத்​தில் தமிழர் எதிர் தமிழர் என்ற நிலை உரு​வாகும். அதே​நேரம், நாடு தழு​விய அளவில் தேர்​தல் பேசப்பட வேண்​டும் என​ காங்​கிரஸ் கரு​தி​யது. இதனால் மயில்​சாமி அண்​ணாதுரையை ஏற்​ப​தில் கூட்​ட​ணித் தலை​வர்​களுக்கு உடன்​பாடு இல்​லை.

இதனாலேயே ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்த ஓய்​வு​ பெற்ற நீதிபதி சுதர்​சன் ரெட்டி அறிவிக்​கப்​பட்​டார். இவ்​வாறு தெரி​வித்​தனர். ஆனால், இந்த அறி​விப்​பின் மூலம் தமிழ​ரா, கூட்​ட​ணியா என்ற தர்​மசங்​கட​மான நிலைக்கு திமுக ஆளாகி​யுள்​ளது. இதே நிலையை 1987-ம் ஆண்டு திமுக எதிர்​கொண்​டது.

அப்​போது, குடியரசுத் தலை​வர் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்ட ஆர்​.வெங்​கட்​ராமனுக்கு திமுக ஆதர​வளிக்​க​வில்​லை. இதை சுட்​டிக்​காட்டி அப்​போதைய முதல்​வர் எம்​ஜிஆர், “தமிழகத்​தில் சில கட்​சிகள் தமிழருக்கு ஆதர​வளிப்​ப​தில்​லை” என விமர்சித்​தார்.

இதற்கு பதிலளித்த மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி, “அவர் ஒரு தமிழரா என்​பதை விட, தமிழ் மக்​களுக்கு என்ன செய்​தார் என்​பது தான் முக்​கி​யம்” என தெரி​வித்​திருந்​தார். இதேபோல், தற்​போதைய சூழலை​யும் கருத்​தி​யல் யுத்​தம் என்ற கோணத்​தில் அணுக திமுக முடிவு செய்​துள்​ளது. இதற்​கான பிரச்​சா​ரத்தை உடனடி​யாக கூட்​டணி கட்​சிகள் மூல​மாக தொடங்​கி​விட்​டது.

அந்த வகை​யில் விசிக பொதுச்​செய​லா​ளர் துரை.ரவிக்​கு​மாரின் சமூக வலை​தளப்​ப​தி​வில், “அரசமைப்​புச் சட்​டத்தை ஏற்​றுக்​ கொள்​ளாத ஆர்​.எஸ்​.எஸ் அமைப்​பைச் சேர்ந்த ஒரு​வருக்​கும் அரசமைப்​புச் சட்​டத்​தைப் பாது​காத்த முன்​னாள் உச்ச நீதி​மன்ற நீதிபதி பி.சுதர்​சன் ரெட்​டிக்​கும் இடை​யில் நடக்​கும் இந்​தப் போட்டி ஒரு கருத்​தி​யல் போட்​டி​யாகும். அரசமைப்​புச் சட்​டத்​தைப் பாது​காக்க நினைப்​பவர்​கள் யாருக்கு வாக்​களிப்​பது என்​ப​தில் தெளி​வாகவே இருப்​பார்​கள்” என தெரி​வித்​துள்​ளார். இருப்​பினும், தமிழருக்கு எதி​ரான தி​முக என்று பாஜக பிரச்​சா​ரம் செய்​யும்​பட்​சத்​தில் அது தி​முக​வுக்​கு பாதக​மாகு​மா என்​ப​தை பொறுத்​திருந்​துதான்​ ​பார்​க்​க வேண்​டும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x