Published : 21 Aug 2025 05:33 AM
Last Updated : 21 Aug 2025 05:33 AM

கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதா? - இந்து முன்னணி கண்டனம்

சென்னை: கோ​யில் நிதியை அரசு திட்​டங்​களுக்கு பயன்​படுத்​து​வது சமு​தா​யத்​தின் மீதான மறை​முக தாக்​குதல் என இந்து முன்னணி கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து இந்து முன்​னணி மாநில தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: கோயில்​களின் நிதியி​லிருந்து திருமண மண்​டபம் கட்​டும் அரசாணையை நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது. கோயில் நிதி​யும், கோயில் நில​மும் கோயிலுக்​கும், கோயிலுக்கு வரும் பக்​தர்​களுக்​கும் பயன்​படும் வகை​யில் இருக்க வேண்​டும் என்​பது​தான் சட்​டம்.

ஆனால் தமிழக அரசு ஒவ்​வொரு முறை​யும் சட்​டத்தை மீறும் வகை​யில் கோயில் நிதி​யில் அரசு சம்​பந்​தப்​பட்ட திட்​டங்​களை நிறைவேற்ற நினைக்​கிறது. இது இந்து சமு​தா​யத்​தின் மீது நடத்​தப்​படு​கின்ற மறை​முகத் தாக்​குதலாகும். தமிழக அரசு இந்து கோயிலை மட்​டும் இந்து சமய அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் வைத்​துக்​கொண்டு அதனுடைய வரு​மானத்தை சீரழிக்​கிறது.

பக்​தர்​களின் பயன்​பாட்​டுக்கு அல்​லாத கட்​டிடங்​களை கட்டி அதன் மூலம் மிகப் பெரிய அளவில் கோயில் நிதியை ஊழல் செய்ய அரசு நினைப்​ப​தாக பக்​தர்​கள் வேதனைப்​படு​கின்​றனர். கோயிலை​யும், கோயில் நிதி​யை​யும் அழித்​தால் தானே இந்து சமு​தா​யம் அழி​யும் என்​பதை புரிந்து இந்த சதி நடக்​கிறது. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x