Published : 20 Aug 2025 09:12 PM
Last Updated : 20 Aug 2025 09:12 PM
திருத்தணி: நாம் தமிழர் கட்சி சார்பில் திருத்தணி அருகே அருங்குளத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி மரங்களின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான இடத்தை இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் பார்வையிட்டார்.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில், ஆகஸ்ட் 30-ம் தேதி ‘மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காகப் பேசுவோம்!’ என்ற தலைப் பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் இம்மாநாடு நடைபெற உள்ளது.
மாநாடு நடைபெற உள்ள அந்த இடத்தை இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் மரங்களை கட்டித் தழுவி, முத்தமிட்டு மரங்களோடு பேசினார். சமூக வலைதளத்தில் சீமான் பதிவிட்டுள் ள அந்த புகைப் படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாநாடு இடத்தை பார்வையிட்டபோது செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், “உலக உயிர்களுக்கு உயிர் மூச்சான ஆக்சிஜன் மரங்களின் கொடை. வரும் சந்ததிகளுக்கு இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுத்துவிட்டால், அந்த இயற்கை எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்துவிடும் என பேரறிஞர்கள் சொல்கிறார்கள். அதற்காகத்தான் மரங்களின் மாநாடு. தமிழக அரசு பதாகையில்தான் மரம் வளர்க்கும். மண்ணில் மரம் வளர்க்காது. கிளீன் இந்தியா இருக்கு. கிரீன் இந்தியா இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT