Published : 20 Aug 2025 06:00 AM
Last Updated : 20 Aug 2025 06:00 AM

மும்பையில் பலத்த மழையால் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் சேவை பாதிப்பு

சென்னை: மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் பலத்த மழை பெய்து வரு​கிறது. இதனால், மோச​மான வானிலை நில​வுவ​தால், மும்பை​யில் இருந்து நேற்று மாலை 5.35 மணிக்கு சென்​னைக்கு வரவேண்​டிய இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் ரத்து செய்​யப்​பட்​டது.

அதே​போல், சென்​னை​யில் இருந்து நேற்று மாலை 6.20 மணிக்கு மும்​பைக்கு புறப்​பட்டு செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்​யப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது.

மும்பை - சென்னை இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம், மும்பை - சென்னை ஏர் இந்​தியா விமானம், சென்னை - மும்பை ஏர் இந்​தியா விமானம், சென்னை - மும்பை இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்​களின் வரு​கை, புறப்​பாடு தாமத​மானது. விமானங்​கள் ரத்​து, தாமதம் குறித்​து, இண்​டிகோ ஏர்​லைன்​ஸ், ஏர் இந்​தியா விமான நிறு​வனங்​கள், பயணி​களுக்கு முன்​ன​தாகவே அறி​விப்பு கொடுத்​து, அவர்​கள் மாற்று வி​மானங்​களில், பயணிக்​க ஏற்​பாடு​களை செய்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x