Published : 20 Aug 2025 05:25 AM
Last Updated : 20 Aug 2025 05:25 AM

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமதாஸ்: ஆக.31-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்

விழுப்புரம்: கட்சி விரோத செயல் உள்​ளிட்ட குற்​றச்​சாட்​டு​களுக்கு ஆக.31-ம் தேதிக்​குள் விளக்கம் அளிக்​கு​மாறு அன்​புமணிக்​கு, ராம​தாஸ் தரப்​பில் இருந்து நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் அன்​புமணி​யால் நடத்​தப்​பட்ட பொதுக்​குழுக் கூட்டத்தில், அவரது தலை​வர் பதவியை ஓராண்​டுக்கு நீட்​டித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

தொடர்ந்​து, புதுச்​சேரி அடுத்த பட்டானூரில் கடந்த 17-ம் தேதி ராம​தாஸால் நடத்​தப்​பட்ட மாநில சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில், கட்​சி​யின் நிறு​வன​ரான ராமதாஸே பாமக​வின் தலை​வ​ராக செயல்​படு​வார் என்ற தீர்​மானம் நிறைவேறியது.

மேலும், அன்​புமணி மீது 16 குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்​து, அவற்றை ஒழுங்கு நடவடிக்கை குழு​வுக்கு அனுப்​பு​மாறு கட்​சி​யின் கவுர​வத் தலை​வர் அறிக்கை சமர்ப்​பித்​தார். இந்​நிலையில், ராம​தாஸ் தலை​மை​யில் பாமக ஒழுங்கு நடவடிக்​கைக் குழுக் கூட்​டம், தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. கூட்​டத்​துக்​குப் பிறகு ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்​பின​ரான சேலம் மேற்கு எம்​எல்ஏ அருள், அறிக்கை ஒன்றை வாசித்​தார்.

அவர் பேசி​ய​தாவது: பட்​டானூரில் நடை​பெற்ற மாநில சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில், செயல் தலை​வர் அன்​புமணி மீதான கட்சி விரோத நடவடிக்​கைகள் குறித்து கட்​சி தலை​மைக்கு வரப்​பெற்ற 16 குற்​றச்​சாட்​டு​கள் பொதுக்​குழு​வில் முன்​வைக்​கப்​பட்​டு, கட்​சி​யின் அமைப்பு விதி​களின்​படி ஒழுங்கு நடவடிக்கை குழு​வுக்கு அனுப்​பப்​பட்​டது.

இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்​கைக் குழு ஆலோ​சனை நடத்​தி, குற்​றச்​சாட்​டு​களுக்கு விளக்​கம் கேட்டு அன்​புமணிக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்​யப்​பட்​டது. அமைப்பு செய​லா​ளர் மூலம் கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது. குற்​றச்​சாட்​டு​கள் தொடர்​பான விளக்​கம் மற்​றும் ஆவணங்​களை ஆக.31-ம் தேதிக்​குள் நேரில் அல்​லது அஞ்​சல் மூலம் சமர்ப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அருள் கூறும்​போது, “பாமக விதி​களின்​படி நிறு​வனர் ராம​தாஸ் மட்​டுமே நிரந்​தர​மானவர். எனவே, வழக்​கறிஞர் பாலு கூறும் தகவல்​கள் தவறானவை. ஆக.31-ம் தேதிக்​குள் அன்​புமணி விளக்​கம் அளிக்​கத் தவறி​னால், 9 பேர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்​கைக் குழு, அடுத்​தக்​கட்ட நடவடிக்கை குறித்து ராம​தாஸுக்கு சில பரிந்​துரைகளை அளிக்​கும். மேல் நடவடிக்கை குறித்து ராம​தாஸ் முடிவு செய்​வார். வழக்​கறிஞர் பாலு​வின் பொய்​களை தவிர்த்​து, உண்மை நிலையை அறிந்​தால், ராம​தாஸை சந்​திக்க அன்​புமணி முன்​வரு​வார்” என்​றார்​.

குற்​றச்​சாட்​டு​கள் என்ன? - புத்​தாண்டு சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில் ராம​தாஸுக்கு எதி​ரான கருத்​துகளை தெரி​வித்​து, மைக்கை தூக்கி வீசி​யது, பனையூரில் புதிய அலு​வல​கம் தொடங்​கி​யுள்​ள​தாக கூறி கட்​சியை பிளவு​படுத்​தி​யது, சமூக வலைதளங்​களில் சிலர் மூலம் ராம​தாஸுக்கு எதி​ராக கருத்​துகளை பதி​விட்​டது, பேச்​சு​வார்த்​தைக்கு உடன்​ப​டா​மல் உதாசீனப்படுத்தியது, தைலாபுரம் வீட்​டில் ஒட்​டு​ கேட்​புக் கரு​வியை வைத்​தது, ராம​தாஸ் அனு​ம​தி​யின்றி பொதுக்​குழுக் கூட்டத்தை நடத்​தி​யது மற்​றும் உரிமை மீட்பு என்ற பெயரில் பயணம் மேற்​கொண்​டது, ராம​தாஸிடம் பேசாமலேயே 40 முறை பேசி​ய​தாக பொது​வெளி​யில் பொய் பேசி​யது உட்பட 16 குற்​றச்​சாட்​டு​கள் அன்​புமணி மீது சுமத்​தப்​பட்​டுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x