Published : 20 Aug 2025 04:43 AM
Last Updated : 20 Aug 2025 04:43 AM

முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் தொடக்கம்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து 155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார். உடன் அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், முன்னாள் படைவீரர் நலத்துறை இயக்குநர் சஜ்ஜன்சிங் ரா சவான்.

சென்னை: ​முன்​னாள் படைவீரர்​கள் வாழ்​வா​தார மேம்​பாட்​டுக்​கான ‘முதல்​வரின் காக்​கும் கரங்​கள்’ என்ற புதிய திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​து, தொழில் தொடங்​கு​வதற்​கான ஒப்​புதல் ஆணை​களை​யும் வழங்​கி​னார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: நாம் சுதந்​திரக் காற்றை சுவாசிக்க, கொட்​டும் மழை​யிலும், குளிரிலும் தமது இன்​னு​யிரை​யும் பொருட்​படுத்​தாது தாய் நாட்​டுக்​காக தங்​களது இளம் வயதை ராணுவப் பணி​யில் கழித்​து, பணிக்​காலம் நிறைவு பெற்ற, ஓய்​வு​பெற்ற முன்​னாள் படைவீரர்​களின் நலன் காக்க பல்​வேறு திட்​டங்​களை அரசு செயல்​படுத்தி வரு​கிறது.

கடந்​தாண்டு முதல்​வர் ஸ்டா​லின், தனது சுதந்​திர தின உரை​யில் ‘‘தாய்​நாட்​டுக்​காகத் தங்​கள் இளம் வயதை ராணுவப் பணி​யில் கழித்​து, பணிக்​காலம் நிறைவு பெற்ற, ஓய்​வு​பெற்ற முன்​னாள் படைவீரர்​கள் பாது​காப்​பான வாழ்க்​கையை உறுதி செய்​ய​வும், வாழ்​வா​தா​ரத்தை மேம்​படுத்​த​வும், ‘முதல்​வரின் காக்​கும் கரங்​கள்’ என்ற புதிய திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​படும்’’ என அறிவித்தார்.

அதன்​படி, முதல்​வர் ஸ்டா​லின், நேற்று “முதல்​வரின் காக்​கும் கரங்​கள்” திட்​டத்தை தொடங்கி வைத்​து, 155 முன்​னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்​கு​வதற்​கான ஒப்​புதல் ஆணை​களை வழங்​கும் அடை​யாள​மாக, 15 பேருக்கு ஆணை​களை வழங்​கினார். இத்​திட்​டத்​தில், 155 பயனாளி​களுக்​கான திட்ட செல​வின​மாக ரூ.24.43 கோடி, 30 சதவீதம் மானி​யத்​துடன் வழங்கப்படும்.

இத்​திட்​டத்​தின்​கீழ் முன்​னாள் படைவீரர்​கள் சுயதொழிலில் ஈடு​பட​வும் சிறந்த தொழில் முனை​வோ​ராக மாற தேவை​யான நிதி மற்​றும் பயிற்​சிகளும் வழங்​கப்​படும். இத்​திட்​டத்​தில் முதற்​கட்​ட​மாக 348 முன்​னாள் படைவீரர்​கள் மற்​றும் அவர்​தம் குடும்​பத்​தினர் பயனடைவர். இத்​திட்​டத்​துக்​கான மொத்த செல​வினம் ரூ.50.50 கோடி​யாகும்.

இத்​திட்​டப்​படி, முன்​னாள் படைவீரர்​கள் பல்​வேறு தொழில் தொடங்​கு​வதற்கு ரூ.1 கோடி வரை வங்கி மூலம் கடன் பெறு​வதற்கு வழி​வகை செய்​யப்​பட்​டு, தொழில்​களுக்கு வழங்​கப்​படும் கடன் தொகை​யில் 30 சதவீதம் மூலதன மானி​யம், 3 சதவீதம் வட்டி மானி​யம் வழங்​கப்​படும். இத்​திட்​டத்​தின்​கீழ், முன்​னாள் படைவீரர்​களிடம் இருந்து பெறப்​படும் விண்​ணப்​பங்​களை கூர்ந்​தாய்வு செய்​வதற்​கு, மாவட்ட ஆட்​சி​யரை தலை​வ​ராக கொண்ட மாவட்ட அளவிளான தேர்வு பணிக்​குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இக்​குழு​வின் ஒப்​புதலின் அடிப்​படை​யில் விண்​ணப்​பங்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டு, சம்​பந்​தப்​பட்ட வங்​கிக்கு தொழில் தொடங்க கடன் ஒப்​புதல் வேண்டி பரிந்​துரைக்​கப்​படு​கிறது.

இவ்​வங்​கி​களால் மேலும் சீராய்வு செய்​யப்​பட்டு தற்​காலிக ஒப்​புதல் ஆணை வழங்​கப்​படும். தொழில் தொடங்​கு​வதற்​கான வங்கியின் தற்​காலிக ஒப்​புதல் பெற்​றவர்​களுக்கு அரசு செல​வில் சென்​னை-தொழில் முனை​வோர் மேம்​பாட்டு மற்​றும் புத்​தாக்க நிறு​வனம் மூலம் தொழில் முனை​வோர் மேம்​பாட்டு பயிற்சி அளிக்​கப்​படும்.

இறு​தி​யாக தொழில் தொடங்​கு​வதற்கு தேவைப்​படும் கடனுதவி சம்​பந்​தப்​பட்ட வங்​கி​களால் கடன் இறுதி ஒப்​பளிப்பு அளிக்கப்படும். வருங்​காலங்​களில் தமிழக அரசு, நிதி நிறு​வனங்​களு​டன் இணைந்து 500 முன்​னாள் படைவீரர்​கள் பயனடை​யும் வகை​யில் இத்​திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

நிகழ்ச்​சி​யில், அமைச்​சர் என்​.கயல்​விழி செல்​வ​ராஜ், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், பொதுத்​துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்​கர், முன்​னாள் படைவீரர் நலத்​துறை இயக்​குநர் சஜ்ஜன்​சிங் ரா சவான் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x