Published : 19 Aug 2025 05:39 AM
Last Updated : 19 Aug 2025 05:39 AM

தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தொடரும்: உழைப்போர் உரிமை இயக்கம் தகவல்

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​களின் போராட்​டம் தொடரும், காவல் துறை​யிடம் அனு​மதி கோரி கடிதம் வழங்​கப்​பட்​டுள்​ளது என உழைப்​போர் உரிமை இயக்​கம் தெரி​வித்​துள்​ளது.

சேப்​பாக்​கத்​தில் உள்ள பத்​திரிக்​கை​யாளர் மன்​றத்​தில் உழைப்​போர் உரிமை இயக்க ஆலோ​சகர் வழக்​கறிஞர் குமார​சாமி நிருபர்​களிடம் கூறிய​தாவது: 13 நாட்​கள் அமைதி வழி​யில் போராட்​டம் நடத்திய தூய்​மைப் பணி​யாளர்​களை பொது நல வழக்கு என்ற நாடகத்தை நடத்​தி, காவல் துறையைப் பயன்​படுத்தி கலைத்தனர்.

இந்த பொதுநல வழக்​கைத் தொடர்ந்த தேன்​மொழி காவல் துறை​யினரின் படங்​களை ஆவண​மாக சமர்ப்பித்துள்ளார். இந்த வழக்கு காவல் துறை​யின் தூண்​டு​தலால்​தான் தொடரப்​பட்​டுள்​ளது. காவல் துறை​யின் அடக்​கு​முறை நடவடிக்​கைகளை உயர் நீதி​மன்​றம் கண்​டித்​து, கைது செய்​தவர்​களை விடுவிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

மேலும் போராட்​டம் நடத்த தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு இடம் வழங்க வேண்​டும் எனவும் தெரி​வித்​துள்​ளது. எங்​களின் போராட்​டம் இன்​னும் முடிய​வில்​லை; தொடரும். காவல் துறை​யிடம் போராட்​டம் நடத்த அனு​மதி கோரி கடிதம் வழங்​கி​யுள்​ளோம். அனு​மதி வழங்​க​வில்லை எனில் அனு​மதி கோரிப் போராட வேண்​டிய நிலை ஏற்​படும்.

காவல் துறை தனி​யார் நிறு​வனத்​துக்கு ஆதர​வாகச் செயல்​படுமா அல்​லது நீதி​மன்ற உத்​தர​வின்​படி எங்​களுக்கு சாதக​மாக நடவடிக்கை எடுக்​குமா என்​பதை பொருத்​திருந்து பார்ப்​போம். தமிழகம் முழு​வதும் தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு ஆதர​வாகப் போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. போராட்​டங்​கள் மேலும் வலு​வடை​யும். திரு​மாவளவன் எந்த நோக்​கத்​துடன் அவரது கருத்​துகளைத் தெரி​வித்​தார் என்​பது தெரிய​வில்​லை. தவறான நோக்​கத்​தில் கூறி​யிருக்க மாட்​டார்.

அவரது ஆதர​வும் எங்​களுக்​குத் தேவை. குப்​பையை மனிதர்​கள் சுத்​தம் செய்​யக்​கூ​டாது, இயந்​திர மனிதர்​கள் ரோபோக்​கள் மூலம்​தாம் அகற்ற வேண்​டும் என்ற நிலை வந்​தால் அதை வரவேற்​போம். ஆனால் குப்​பையை மனிதர்​கள் அகற்​றும் வரை அவர்​களுக்கு பணி நிரந்​தரம், பணிப் பாது​காப்​பு, ஓய்​வூ​தி​யம் ஆகிய​வற்றை வழங்க வேண்​டும்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜன. 19-ம் தேதி, ‘சமூகப் பொருளா​தார காரணங்​களை எல்​லாம் நன்கு ஆராய்ந்த பிறகு 12 ஆயிரம் தற்​காலிகப் பணி​யாளர்​களை மாநக​ராட்சி பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும்’ என்று முதல்​வர் கூறி​யிருந்​தார். அதை தான் இப்​போது நிறைவேற்ற வேண்​டும் என நாங்​கள் கோரு​கிறோம்.

முதல்​வர் மீது நாங்கள் அவதூறு பரப்​புவ​தாக​ கூறுகின்​றனர். நாங்​கள் அது​போன்று எந்த எண்​ணத்​தி​லும் போராட்​டத்தை நடத்தவில்​லை. அதி​முக ஆட்​சிக் காலத்​தில் 10 மண்​டலங்​களை தனி​யார்​மய​மாக்​கிய​போது எங்​களிடம் பணி​யாளர்​கள் வழக்​குத் தொடர கோரிக்கை வைக்​க​வில்​லை, தற்​போது​தான் கோரிக்கை வைத்​திருக்​கிறார்​கள். அதனால்​தான் வழக்கு தொடர்ந்து போராட்​டம்​ நடத்​துகிறோம்​. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x