Published : 19 Aug 2025 07:06 AM
Last Updated : 19 Aug 2025 07:06 AM

ராமரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை நடமாட விடக்கூடாது: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

திருவாரூர்: ‘​ராமரை இழி​வாகப் பேசிய கவிஞர் வைர​முத்​துவை நடமாட விடக்​கூ​டாது’ என மன்​னார்​குடி​யில் ராஜமன்​னார் செண்டலங்​கார ஜீயர் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சமீப​கால​மாக இந்​துக்​களுக்கு விரோத​மான போக்கு அதி​கரித்​துள்​ளது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை வைக்க, இந்த அரசு கெடு​பிடிகளை விதிக்கிறது.

சென்​னை​யில் நடந்த விழா ஒன்​றில், கவிஞர் வைர​முத்​து, ராமபிரானை மனநிலை சரியில்​லாதவர் என்​றும், புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்​றும் பேசியுள்​ளார்.

இந்​துக்​களுக்கு விரோத​மாக இவர் தொடர்ச்​சி​யாக பேசி வருகிறார். இது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது. வைர​முத்​து​வை, சாலை​யில்நடமாட விடக்​கூ​டாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x