Published : 19 Aug 2025 05:31 AM
Last Updated : 19 Aug 2025 05:31 AM

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆளுநர் ஆகிறார்?

சென்னை: ​பாஜக மூத்த தலை​வர் ஹெச்​. ராஜாவை ஆளுநர் பதவி​யில் அமர்த்த அக்கட்சி திட்​டமிட்டுள்ள​தாக தகவல் வெளியாகியுள்​ளது. தமிழகத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற இருக்​கிறது. இதனால், தேசிய அளவில் பாஜக​வின் கவனம் தமிழகத்​தின் பக்​கம் திரும்பி உள்​ளது. 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக​வுடன் கூட்​டணி அமைத்து தேர்​தலை சந்​திக்​கிறது. இதற்​காக வியூ​கங்​களை வகுத்து வரு​கிறது.

அந்​தவகை​யில், தமிழகத்தை சேர்ந்த பாஜக​வினருக்கு தேசிய அளவில் கட்சி பதவி​களை வழங்​கி​யும், அமைச்​சர​வை, ஆளுநர், துணை குடியரசு தலை​வர் போன்ற பதவி​களை​யும் பாஜக வாரி வழங்​கி, தமிழகத்​துக்கு ஆதர​வாக இருப்​பது போன்ற தோற்​றத்​தை​யும் ஏற்​படுத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில், 2026 தேர்​தலை​யொட்​டி, தமிழக பாஜக​வினருக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்க தேசிய தலைமை விரும்​புவ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. நாகாலாந்து ஆளுந​ராக இருந்த இல.கணேசன், கடந்த 15-ம் தேதி கால​மா​னார்.

இதனால், அம்மாநில ஆளுநர் பதவி காலி​யாக உள்​ளது. அதே​போல், மகா​ராஷ்டிரா மாநில ஆளுந​ராக இருக்​கும் சி.பி.​ரா​தாகிருஷ்ணன், குடியரசுத் துணை தலை​வர் வேட்​பாள​ராக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். இதனால், மகா​ராஷ்டிரா ஆளுநர் பதவி​யும் காலி​யாக​வுள்​ளது.

இந்த இரு மாநிலங்​களி​லும் ஆளுந​ராக இருந்​தவர்​கள் தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​ப​தால், மீண்​டும் தமிழகத்​தில் இருந்து ஒரு​வரை ஏதாவது ஒரு மாநிலங்​களுக்கு ஆளுந​ராக நியமிக்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

பல்​வேறு கட்ட ஆலோ​சனை​களுக்கு பிறகு, ஆளுநர் பதவிக்கு தமிழக பாஜக​ மூத்த தலை​வர்​கள் பட்​டியலை பாஜக தயாரித்​துள்​ள​தாக​வும், அதில் ஹெச்​.​ராஜா பெயர் முதலிடத்​தில் இருப்​ப​தாக​வும் தெரிகிறது.

இதுகுறித்து தமிழக பாஜக மூத்த நிர்​வாகி ஒரு​வர் கூறும்​போது, ‘ஹெச்​.​ராஜா ஆளுநர் பதவிக்கு பொருத்​த​மானவ​ராக இருப்​பார். இதற்கு அதிக வாய்ப்பு இருக்​கிறது. அது​வும், மகா​ராஷ்டிரா மாநிலத்​துக்கு ஆளுந​ராகும் வாய்ப்பு அதி​கம் உள்ளது. குடியரசுத் துணை தலை​வர் வேட்​பாள​ராக நாங்​கள் தமிழகத்​தில் இருந்து அண்​ணா​மலையை எதிர்ப்​பார்த்​தோம். ஆனால், யாரும் எதிர்பா​ராத வகை​யில், சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அறிவிக்​கப்​பட்​டார். அது​போல், ஆளுநர் பத​வி​யிலும் எது வேண்​டாலும் நிகழலாம்​’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x