Published : 16 Aug 2025 05:53 AM
Last Updated : 16 Aug 2025 05:53 AM

அதிமுகவின் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை காப்பியடித்து ‘தாயுமானவர்’ திட்டம் - இபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: அ​தி​முக​வின் நகரும் நியாய​விலைக் கடை திட்​டத்தை காப்​பியடித்து தாயு​மானவர் திட்​ட​மாக திமுக செயல்படுத்துவதாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி குற்​றம்​சாட்​சி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆண்டு பிப். 19-ம் தேதி சமர்ப்​பித்த தமிழக பட்ஜெட்டில் ‘தா​யு​மானவர்’ என்ற புதிய திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

அதன்​படி, ஆதர​வற்​றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் உள்ள குடும்​பங்​கள், பெற்​றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்​றிய​வர்​கள், மாற்​றுத் திற​னாளி​கள், சிறப்பு குறை​பாடுடைய குழந்​தைகள் உள்ள குடும்​பங்​கள் போன்ற, சமூகத்​தின் விளிம்பு நிலை​யில் வாழும் மக்​கள் அனை​வரும் இத்​திட்​டத்​தின் கீழ் அடை​யாளம் காணப்​பட்​டு, அவர்களுக்குத் தேவை​யான அடிப்​படை வசதி​கள் மட்​டுமின்​றி, கல்​வி, வேலை​வாய்ப்​பு, திறன் மேம்​பாடு, வீடு​கள் போன்ற அனைத்து உதவி​களும் வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

சுமார் 18 மாதம் தாமத​மாக, திமுக ஆட்சி முடிவடை​யும் தரு​வா​யில், அறி​வித்​த​படி கல்​வி, வேலை​வாய்ப்​பு, திறன் மேம்​பாடு, வீடுகள் வழங்​குதல் என்ற எந்​த​வித நன்​மை​களை​யும் வழங்​காமல், கடந்த 12-ம் தேதி வயதானவர்​கள் மற்​றும் மாற்றுத் திறனாளிகளின் வீடு​களுக்கே சென்று ரேஷன் பொருட்​கள் வழங்​கப்​படும் என்ற திட்​டத்தை அறி​வித்​து, அதற்கு ‘தா​யு​மானவர்’ என்றும் பெயர் சூட்​டி​உள்​ளனர்.

எனது தலை​மையி​லான அதி​முக ஆட்​சி​யில் 2020 நவ.21-ம் தேதி ரூ.9 கோடி​யில் 3,501 ‘நகரும் நியாய விலைக் கடைகள்’ தமிழகமெங்​கும் தொடங்கிவைக்கப்​பட்டது. அதி​முக ஆட்​சி​யில் செயல்​படுத்​தப்​பட்ட பல திட்​டங்​களுக்கு ‘காப்பி பேஸ்ட்’ செய்​து, தனது பெயரை அல்​லது புதுப் பெயரை சூட்டி அமல்​படுத்​துகின்​றனர். அதன்​படி தாயு​மானவர் திட்​ட​மும் காப்பி அடிக்கப்பட்டுள்ளது.

மற்​றவர்​களைப் பார்த்து காப்​பியடிக்​கும் ஆட்​சி​யாளர்​கள் தமிழகத்​துக்கு தேவை​யில்​லை. சொந்​த​மாக சிந்​தித்​து, மக்​களின் தேவை​களை உணர்ந்​து, திட்​டங்​களை தீட்​டு​பவர்​களே தமிழகத்​துக்கு தேவை. இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x