Last Updated : 15 Aug, 2025 10:04 AM

1  

Published : 15 Aug 2025 10:04 AM
Last Updated : 15 Aug 2025 10:04 AM

கரிசன கணேசன்... கண்டுகொள்ளாத அருண்மொழித்தேவன்! - கடலூர் மாவட்ட அரசியல் கணக்குகள்

கணேசன்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திட்டக்குடி தனி தொகுதி. அமைச்சர் கணேசன் தான் இப்போது இங்கு எம்எல்ஏ. திமுக-வை தவிர மற்ற பிரதான கட்சிகள் எதுவும் திட்டக்குடிக்கு பெரிதாக எந்தத் திட்டமும் வைத்திருக்காததால், தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் கணேசன், 2026 தேர்தலிலும் இங்கே வெற்றிக்கொடி நாட்டுவதற்கான வேலைகளில் வேகமாக இருக்கிறார்.

2011 வரை மங்களூர் தனி தொகு​தியாக இருந்த இந்தத் தொகு​தி​யில் 2001-ல் விசிக தலைவர் திரு​மாவளவன் திமுக சின்னத்​தில் நின்று வெற்றி​பெற்​றார். ஆனால், திமுக தலைமை​யுடன் ஏற்பட்ட கருத்து வேறு​பாட்​டால், 2004-ல் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். அதையடுத்து வந்த இடைத் தேர்​தலில், முன்​னாள் எம் எல்ஏ-வான கணேசன் திமுக வேட்​பாள​ராகப் போட்​டி​யிட்டு வெற்றி​பெற்​றார். அடுத்து வந்த 2006 பொதுத் தேர்​தலில் தற்போதைய காங்​கிரஸ் தலைவரான செல்​வப்​பெருந்தகை விசிக வேட்​பாளராக போட்​டி​யிட்டு வெற்றி​பெற்​றார். 2011 தொகுதி மறுசீரமைப்​பின் போது மங்களூர் தொகு​தி​யானது திட்​டக்​குடியாக மாறியது.

2011-ல் இங்கு தேமு​தி​க-வைச் சேர்ந்த தமிழழகன் எம்எல்​ஏ​வா​னார். 2016-ல் மீண்​டும் கணேசன் எம்எல்ஏ ஆனார். கடந்த தேர்​தலிலும் மீண்​டும் கணேசனே வெற்றி​பெற்று, இப்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்​பாட்டுத் துறைக்கு அமைச்​சராக இருக்​கிறார். இந்தத் தொகு​தி​யில் ஒன்றுக்கு நான்கு முறை எம்எல்​ஏ-​வாகி இருக்​கும் கணேசன். ஐந்தாவது முறை​யாக​வும் வெற்றிக்​கொடி நாட்ட தொகு​திக்​குள் பம்பர​மாய் சுற்றி வருகிறார்.

1984-க்​குப் பிறகு நடைபெற்ற 7 சட்டப்​பேர​வைத் தேர்​தல்​களில் ஒரே ஒருமுறை மட்டுமே அதிமுக இங்கு போட்​டி​யிட்​டது. அப்போதும் அந்தக் கட்சி​யால் ஜெயிக்​க​முடிய​வில்லை. இதனால் இந்தத் தொகுதியை கூட்​ட​ணிக் கணக்​கில் வைத்​திருக்​கிறது அதிமுக. அதிமுக இங்கு பிரகாசிக்​க​ முடியாமல் இருப்​ப​தற்​குக் காரணம் தேர்​தலில் போட்​டி​யிடுமளவுக்கு பரிச்​சயமான முகங்கள் அந்தக் கட்சிக்கு இல்லாதது தான் என்கிறார்​கள். இன்னொரு பக்கம், கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலா​ளரான அருண்​மொழித்​தேவனும் கணேசனும் பள்ளித் தோழர்கள் என்ப​தால் பரஸ்​பரம் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் நடத்து​வ​தில்லை என்கிறார்​கள். இந்தப் புரிதலும் கணேசனுக்கு சாதகமாக இருக்​கிறது.

அருண்மொழித்தேவன்

2021-ல், இந்தத் தொகு​தியை பாஜக-வுக்கு விட்டுக்​கொடுத்த அதிமுக, இம்முறை​யும் அதற்கு தயாராகவே இருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள். இதனால் அதிமுக தரப்​பில் யாருமே தேர்​தலில் போட்​டி​யிடும் ஆர்வம் இல்லாமல் இருக்​கிறார்​கள். வெற்றிபெற முடி​யுமா முடி​யாதா என உறுதியாக தெரியாவிட்​டாலும் பாஜக தரப்​பில் முன்​னாள் எம்எல்​ஏ-​வும் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவருமான தமிழழகன் கணேசனை எதிர்த்து களமிறங்க தயாராக இருக்​கிறார்.

இதனிடையே, வாக்​காளர்களை வசப்​படுத்த வாரத்​தில் 3 நாட்கள் திட்​டக்​குடியையே சுற்றிவரு​கிறார் அமைச்சர் கணேசன். பெண்​களிடம், “என்ன அக்கா... தையல் மிஷின் கிடைச்​சுதா? என்ன ஆயி... ஸ்டா​லின் பணம் (மகளிர் உரிமைத் தொகை) வருதா?” என்றெல்​லாம் உரிமை எடுத்​துப் பேசி வருகிறார். “அமைச்​சர்​களும் எம்எல்​ஏ-க்​களும் தங்கள் தொகு​தி​யில் இருந்து மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்​ய​வேண்​டும்” என முதல்வர் அறிவித்த பிறகு, திட்​டக்​குடியே கதி எனக் கிடக்​கிறார் கணேசன். கடலூர் மேற்கு மாவட்டச் செயலா​ள​ராக​வும் இருப்​ப​தால், சொந்தக் கட்சிக்​குள்​ளும் தனக்​கெ​திராக யாரும் முளைத்து​விடக் கூடாது என்ப​தி​லும் கவனமாக இருக்​கிறார்.

அமைச்சர் கணேசனை எதிர்க்க அதிமுக-​வில் வலுவான வேட்​பாளர் யாருமே இல்லை என்கிறார்களே என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்​மொழித்​தேவனிடம் கேட்​டதற்கு, “அமைச்சரை எதிர்க்க அதிமுக-​வில் வலுவான வேட்​பாளர் இல்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. கணேசன் எதிர்​மு​காமின் மாவட்டச் செயலா​ளர். அப்படி இருக்கை​யில் எனது கட்சிக்​குத் தான் நான் விசு​வாசமாக இருக்​க​முடி​யும். மற்றபடி, நானும் அவரும் பள்ளித் தோழர்​களாக இருப்​ப​தால் ஒருவரை ஒருவர் எதிர்த்து அரசியல் செய்​வ​தில்லை என்று சொல்​வதெல்​லாம் தவறான தகவல்” என்றார்.

திட்​டகுடியை விட்டு போகவே மாட்​டேன் என்கிறீர்களே என அமைச்சர் கணேசனிடம் கேட்​டதற்கு, சிரித்​துக் கொண்டே பதில் சொன்னவர், “மீண்​டும் தளபதி ஆட்சி தொடர​வேண்​டும். அவர் செயல்​படுத்​தி​யுள்ள திட்​டங்கள் மக்களை சென்​றடைந்​திருக்​கிறதா என்பதை நேரடி​யாகச் சென்று பார்த்து வருகிறேன். மக்கள் என்னிடம் அளவற்ற அன்புடன் இருக்​கிறார்ர்​கள். தங்களுக்​கானதை உரிமையோடும் என்னிடம் கேட்​கிறார்​கள். அவர்​களின் தேவையை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய இடத்​தில் நான் இருக்​கிறேன்” என்​றார்.

தேர்​தலுக்கு 10 மாதம் இருக்​கும் போது மட்டும் இப்படி கரிசனம் காட்​டா​மல் ஐந்து ஆண்​டு​களும் இப்​படியே இருந்​​தால் மக்​கள் ஏன் சார் உங்களை மறக்​கப் போகிறார்​கள்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x