Published : 13 Aug 2025 06:15 AM
Last Updated : 13 Aug 2025 06:15 AM

12-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தனியார் நிறுவனம் பணப்பலன் வழங்குவது உறுதி செய்யப்படும் - சென்னை மாநகராட்சி

சென்னை: தனி​யார் நிறு​வனம் வழங்​கும் பணப்​பலன் உறு​தி​செய்​யப்​படும். எனவே தூய்​மைப் பணி​யாளர்​கள் உடனடி​யாக பணிக்​குத் திரும்​ப வேண்டும் என்று சென்னை மாநக​ராட்சி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி​யும் இரண்டு மண்டல தூய்​மைப்பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் கடந்த 12 நாட்​களாக ரிப்​பன் மாளிகை அருகே போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர். தூய்​மைப் பணி​யாளர்​களு​டன் 12-க்​கும் மேற்​பட்ட சுற்​றுகளில் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யும் தோல்​வி​யில் முடிந்த நிலை​யில், தொடர்ந்து வேலைநிறுத்​தம் நடை​பெற்று வரு​கிறது.

இந்​நிலை​யில், அவர்​கள் பணிக்​குத் திரும்ப வேண்​டு​கோள் விடுத்து மாநக​ராட்சி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:கடந்த ஆண்​டு​களில் 11 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி முறை மாற்​றப்​பட்​ட​போது செயல்​படுத்​தப்​பட்ட அதே நடவடிக்​கைகள் தற்​போதும் பின்​பற்​றப்​பட்​டன. ஆனால் இந்த இரண்டு மண்​டலங்​களில், சுயஉதவிக்​குழு அமைப்​பின் கீழ் பணி​யாற்றி வந்த தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​கள் இதை ஏற்​காமல், காத்​திருப்​புப் போராட்​டத்தை நடத்தி வரு​கின்​றனர்.

இதனால் பல்​வேறு சேவை​களைப் பெறு​வதற்​காக சென்னை மாநக​ராட்​சிக்கு வரும் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​களும் பாதிக்​கப்​படு​கின்​றனர். போராட்​டம் தொடர்​வ​தால் சம்​பந்​தப்​பட்ட மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களில் தொய்வு ஏற்​பட்டு குப்​பைகள் தேங்கி மக்​களுக்கு பெரும் சுகா​தா​ரப் பாதிப்பு ஏற்​படும் சூழ்​நிலை உள்​ளது. எந்​தவொரு தற்​காலிக தூய்​மைப் பணி​யாள​ரும் நீக்​கப்​பட​வோ, பணி மறுப்பு செய்​யப்​படவோ இல்​லை.

இது​வரை சுயஉதவிக் குழுக்​கள் மூல​மாகவே பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்ட தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ, போனஸ், பண்​டிகை​கால சிறப்பு உதவி​கள், திருமண உதவித் தொகை ரூ.20 ஆயிரம், கல்வி உதவித் தொகை ரூ.12 ஆயிரம், மரண நிகழ்​வுக்​கான உதவி, தற்​செயல், ஈட்​டிய விடுப்​பு​கள், இலவச சீருடை, பாது​காப்பு உபகரணங்​கள் என பல்​வேறு சலுகை​யும், பணி பாது​காப்​பும் கிடைக்​கும். இத்​துடன் தமிழக அரசின் தூய்​மைப் பணி​யாளர் நலவாரி​யம் மூல​மாக பல்​வேறு உதவி​கள் மற்​றும் சலுகைகளும் வழங்​கப்​படும்.

தற்​காலிக தூய்​மைப் பணி​யாளர்​கள் அனை​வரை​யும், தனி​யார் நிறு​வனம் பணி​யில் சேர்ப்​ப​தை​யும் அவர்​களுக்கு உரிய பணி பாது​காப்பு மற்​றும் பணப் பலன்​கள் வழங்​கு​வதை​யும் சென்னை மாநக​ராட்சி 100 சதவீதம் உறுதி செய்​யும். எனவே, போ​ராட்​டத்​தில் ஈடு​படும் அனை​வரும் பொதுநலன் கரு​தி​யும், தங்​களது பணி​ பாது​காப்பு குறித்த உண்மை நிலை​யைப் புரிந்து கொண்​டும், உயர் நீதி​மன்ற வழக்​கு​களின் தீர்ப்பு மற்​றும் தொழில் தீர்ப்​பா​யத்​தின் முடிவு​களை எதிர்​நோக்​கி​யும், உடனடி​யாக வேலை நிறுத்​தத்தை கைவிட்டு பணிக்​குத் திரும்ப வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x