Published : 13 Aug 2025 05:48 AM
Last Updated : 13 Aug 2025 05:48 AM

மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தந்தை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி

சென்னை: அந்​த​மானில் வசிக்​கும் தனது மகளை தன்​னுடன் அனுப்பி வைக்​கக்​கோரி தந்தை தொடர்ந்த ஆட்​கொணர்வு மனு மீதான விசா​ரணை​யின்​போது, உயர் நீதி​மன்ற முதல் மாடியி​லிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்​கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்னை நீலாங்​கரையைச் சேர்ந்த நபரும், அவரதுமனை​வி​யும் கருத்து வேறு​பாடு காரண​மாக பிரிந்​து​விட்​டனர். இவர்​களுக்கு 15 வயதில் மகள் உள்​ளார்.

அந்த சிறுமி தனது அம்​மாவுடன் அந்​த​மானில் உள்ள தனது பாட்டி வீட்​டில் வசித்து வரு​கிறார். சமீபத்​தில் சிறுமி​யின் தாயார் வேறு ஒரு நபரைஇரண்​டாவ​தாக திரு​மணம் செய்து கொண்​ட​தாக கூறப்​படு​கிறது. இதனால் அந்​த​மானில் உள்ளதனது மகளை மீட்டு தன்​னிடம் ஒப்​படைக்​கக்​கோரி சென்​னை​யில் உள்ளசிறுமி​யின் தந்தை உயர்நீதி ​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, அந்​த​மானில் உள்ள சிறுமியை மீட்டு ஆஜர்​படுத்த நீலாங்​கரை போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டிருந்​தனர்.

அதன்​படி இந்த வழக்கு கடந்த முறை விசா​ரணைக்கு வந்​த​போது போலீ​ஸார் அந்த சிறுமியை உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். அப்​போது அந்த சிறுமி சென்​னை​யில் வசிக்​கும் தனது தந்​தை​யுடனோ இரண்​டாவது திரு​மணம் செய்து கொண்ட தாயாருடனோ செல்ல விரும்​ப​வில்​லை. அந்​த​மானில் தனி​யாக வசிக்​கும் பாட்​டி​யுடன் இருக்க விரும்​புவ​தாக தெரி​வித்​தார். அதையடுத்து நீதிப​தி​கள் சிறுமிக்​கும், தந்​தைக்​கும் தனித்​தனி​யாக கவுன்​சிலிங் கொடுத்​து, அதன்​பிறகு ஆஜர்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டனர்.

அதன்​படி இந்த வழக்கு நேற்று மீண்​டும் இதே அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அந்த சிறுமி தனது முடி​வில் எந்த மாற்​ற​மும் இல்​லை. பாட்​டி​யுடன் செல்​லவே விரும்​புவ​தாக மீண்​டும் தெரி​வித்​தார். அதற்கு அவரது தந்தை ஆட்​சேபம் தெரி​வித்​தார். அதையடுத்து நீதிப​தி​கள், இந்த வழக்​கில் ஒரு முடிவு எட்​டப்​படும் வரை அந்த சிறுமியை கெல்​லீ​ஸில் உள்ள அரசினர் காப்​பகத்​தில் தங்க வைக்​கும்​படி போலீ​ஸா ருக்கு அறி​வுறுத்​தினர்.

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி உயர் நீதி​மன்​றத்​தின் முதல் தளத்​தில் இருந்த நீதி​மன்ற அறையி​லிருந்து கீழே குதித்து தற்​கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​டார். ஆனால் உடலில், முகத்​தில் காயங்​களு​டன் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் பிழைத்​தார். அந்த
சிறுமியை மீட்ட பாது​காப்பு போலீ​ஸார், அவரை சிகிச்​சைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இந்த சம்​பவத்​தால்​ உயர்​ நீதி​மன்​ற வளாகத்​தில்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x