Published : 13 Aug 2025 05:10 AM
Last Updated : 13 Aug 2025 05:10 AM

ஓபிஎஸ்-ஐ டெல்லி பாஜகதான் சமாதானப்படுத்த வேண்டும்: டிடிவி தினகரன் கருத்து

சென்னை: ​முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வத்தை டெல்லி பாஜக தலை​வர்​கள் தான் சமா​தானப்​படுத்த வேண்​டும் என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் தெரி​வித்​தார். சென்​னை​யில் போ​ராடி வரும் தூய்​மைப் பணி​யாளர்​களை சந்​தித்து அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் ஆதரவு தெரி​வித்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தூய்​மைப் பணி​யாளர்​களின் கோரிக்கையை உறு​தி​யாக அரசு நிறைவேற்ற வேண்​டும். அவர்​களை மீண்​டும் பழைய முறைப்​படி பணி அமர்த்த வேண்​டும். திமுக தேர்​தல் அறிக்​கை​யில் கூறி​விட்டு இப்​போது அவர்​களது போராட்​டத்தை எப்​படி​யா​வது தடுக்க முயல்​கிறார்​கள். முதல்​வர் நேரடி​யாக வந்து பேச வேண்​டும்.

யாருக்கு தோல்வி முகம் என்​பதை வரும் தேர்​தலில் மக்​கள்காட்​டு​வார்​கள். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் நான் இணை​யக் காரணமே திமுகவை வீழ்த்த வேண்​டும் என்​பது​தான். முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆர், ஜெயலலிதா குறித்து திரு​மாவளவன் பேசியிருப்​பது, அவர் குழப்​பத்​தில் இருப்​பதை காட்​டு​கிறது. மறைந்த தலை​வர்​கள் பற்றி பேசும்​போது கவன​மாக பேச வேண்​டும்.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​ செல்​வம் மீண்​டும் கூட்​ட​ணிக்கு வரு​வார் என நம்​பு​கிறேன். பன்​னீர்​ செல்​வத்தை டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​வர்​கள்​தான் சமா​தானப்​படுத்த வேண்​டும். பாஜக தேசிய பொதுச்​செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் அழைத்​த​தாக​வும் நான் அவரை சந்​திக்க மறுத்​த​தாக சொல்​லப்​படும் செய்தி உண்​மை​யில்லை எனவும் பன்​னீர்​செல்​வம் என்​னிடம் சொன்​னார். இவ்​வாறு தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x