Published : 12 Aug 2025 06:20 AM
Last Updated : 12 Aug 2025 06:20 AM

ஜெயலலிதா எனது அரசியல் ரோல் மாடல்: தேமுதிக பொதுச்​செயலாளர் பிரேமலதா கருத்து

சென்னை: ஒரு சூரியன், ஒரு சந்​திரன் என்​பது போல ஒரு எம்​ஜிஆர், ஒரு ஜெயலலி​தா, ஒரு கருணாநி​தி, ஒரு விஜய​காந்த் தான் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​தார். தேமு​திக பொருளாள​ரும், பிரேமல​தா​வின் சகோ​தரரு​மான எல்​.கே.சுதீஷ் தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தாவுடன் பிரேமலதா இருப்​பது போன்ற புகைப்​படத்தை பதி​விட்​டுள்​ளார்.

இந்த பதிவை தொடர்ந்து அதி​முக கூட்​ட​ணிக்கு தேமு​திக செல்​லப் போகிறதா என்ற விவாதங்​கள் எழுந்​தன. இந்​நிலை​யில், முன்னாள் முதல்​வர் ஜெயலலிதா போல ஒரு கட்சி பொதுச்​செய​லா​ள​ராக அரசி​யலில் சிங்க பெண்​ணாக தனது சகோ​தரி இருக்கிறார் என்​பதை குறிப்​பிட்டே அவர் பதி​விட்​டுள்​ள​தாக பிரேமலதா தெரி​வித்​துள்​ளார். சென்னை மாநக​ராட்சி ரிப்​பன் மாளிகை வளாக நுழை​வாயி​லில் நடை​பெற்று வரும் தூய்மை பணி​யாளர்​களின் போராட்​டத்​திற்கு நேற்று தேமு​திக பொதுச்​செயலா​ளர் பிரேமலதா நேரில் சந்​தித்து ஆதரவு தெரி​வித்​தார்.

பின்​னர் நிருபர்​களிடம் அவர் கூறிய​தாவது: தூய்மை பணி​யாளர்​களின் கோரிக்​கைக்கு நாங்​கள் துணை நிற்​போம். அரசாங்​கம் சொன்ன வாக்​குறு​தியை நிறைவேற்றி அவர்​களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்​டும். நேற்று முன்​தினம் தனி​யார் நிறு​வனம் நடத்​திய நிகழ்ச்​சி​யில் ஆளுமை மிக்க பெண் அரசி​யல்​வாதி என்ற விருதை எனக்கு அளித்​தார்​கள்.

அப்​போது பேசிய சுதீஷ், அதிமுக பொதுச் செய​லா​ள​ராக ஜெயலலிதா சிங்க பெண்​ணாக இருந்​தார். அதற்​குப் பிறகு எனது சகோதரி இன்​றைக்கு ஒரு கட்​சி​யின் பொதுச்​செய​லா​ள​ராக முழு​வது​மாக அரசி​யலில் ஈடு​பட்டு சிங்க பெண்​ணாக இருக்​கிறார் என்று கூறி​னார். தொண்​டர்​கள் என்​னை​யும் ஜெயலலி​தாவை​யும் இனைத்து ஒரு புகைப்​படத்தை பகிர்ந்​தார்​கள். அதை சுதீஷ் தனது முகநூல் பக்​கத்​தில் பகிர்ந்​தார்.

ஒரு சூரியன், ஒரு சந்​திரன் என்​பது போல, ஒரு எம்​ஜிஆர், ஒரு ஜெயலலி​தா, ஒரு கருணாநி​தி, ஒரு விஜய​காந்த் தான். அவர்​களின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அதே​போல் ஒரு பிரேமலதா தான். என்​னுடைய இடத்​தை​யும் யாரும் நிரப்ப முடி​யாது. விஜய​காந்த் இல்​லாத​போதும் அவர் எனக்கு கொடுத்த பயிற்சி நம்​பிக்கை வீரி​யம் என உறு​தி​யுடன் இன்​றும் விஜய​காந்த் வழி​யில் நானும் எங்​கள் தொண்​டர்களும் பயணித்​துக் கொண்​டிருக்​கிறோம்.

எனவே இங்கு ஒருத்​தருக்கு பதில் யாரும் வர முடியாது. ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்​மணி. முதல்​வ​ராக இருந்து பல சாதனைகள் செய்​தவர். எவ்​வளவோ சவால்​களை சந்​தித்​தவர். ஜெயலலிதா எனது அரசி​யல் ரோல் மாடல் என்று ஏற்​கெனவே நான் தெரி​வித்து இருக்​கிறேன். விஜய​காந்த் எம்​ஜிஆரை தனது மானசீக குரு​வாக கொண்​ட​வர்.

இன்​றும் தலைமை அலு​வல​கத்​தில் எம்​ஜிஆரின் சிலை​யும் புகைப்​பட​மும் உள்​ளது. அரசி​யலில் எங்​களுக்கு மானசீக குரு விஜய​காந்த் தான் என்று சொல்​பவர்​கள் அவர் படத்தை பயன்​படுத்​திக் கொள்​ளலாம். அதற்கு தேமு​திக அனு​மதி வழங்​கும். சுவரொட்டிகளி​லும் சமூக வலை​தளங்​களில் மட்​டுமே விஜய​காந்த் படத்​தைப் பயன்​படுத்​தக் கூடாது என்று நாங்​கள் கூறுகிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x