Published : 10 Aug 2025 12:23 AM
Last Updated : 10 Aug 2025 12:23 AM

22 தமிழக கட்சிகளை தேர்தல் ஆணையம் நீக்கி நடவடிக்கை

சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 ஆண்​டு​களாக எந்த தேர்​தலிலும் போட்​டி​யி​டாத 22 கட்​சிகள், தேர்​தல் ஆணைய பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளன.

தேர்​தல் ஆணை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அங்​கீகரிக்​கப்​ப​டாத கட்​சிகள் தொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் ஓர் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, 2019-ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்​டு​களாக எந்த தேர்​தலிலும் போட்​டி​யி​டாத 345 பதிவு செய்​யப்​பட்ட கட்​சிகளை முதல் கட்​ட​மாக பட்​டியலில் இருந்து நீக்​கும் நடை​முறையை தேர்​தல் ஆணை​யம் தொடங்​கியது.

இந்த கட்​சிகளின் பட்​டியலை மாநில தலைமை தேர்​தல் அதி​காரி​களுக்கு அனுப்​பி, விளக்​கம் கோர அறி​வுறுத்​தி​யது. அந்த வகை​யில், தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​குக்​கு, 24 கட்​சிகள் பட்​டியல் அனுப்​பப்​பட்​டது. அதில், 22 கட்​சிகள் நீக்​கப்​பட்​டன. இது​போல நாடு முழு​வதும் 334 கட்​சிகள் நீக்​கப்​பட்​டுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x